Temple info -193 Rajagopalaswamy temple, Mannarkoil ராஜகோபால ஸ்வாமி கோயில், மன்னார்கோயில், திருநெல்வேலி
Temple info -193
கோயில் தகவல் -193
Rajagopala Swamy Temple, Mannarkoil, Thirunelveli
Rajagopalaswamy Kulasekara Perumal Temple is dedicated to Hindu God Vishnu located at Mannarkoil near Ambasamudram in Thirunelveli District of Tamilnadu. The Temple is located at a distance of about 1 km towards west side from Brahmadesam Kailasanathar Temple and 7 Kms from Ambasamudram off the Tenkasi – Kutralam Highway. Mannarkoil is an island bounded by the Thamirabarani river on the south side, and the Ghatana river on the north side.
The island looks like Srirangam near Tiruchirappalli. Rangam means island formed in between two river courses. Mannarkoil has always been in the pilgrimage itinerary in Thirunelveli district by the Vaishnavite population. The imposing perimeter walls enclose temple structures. The village and the temple are mentioned as Vedhanarayanpuram (sound of Vedas is always heard here) and Rajendra Chola Vinnagaram respectively in ancient records.
The saint Kulasekara Azhvar spent his last 30 years in Mannarkoil and attained moksha here. Therefore Mannarkoil has become the Thiruvarasu Koil for Kulasekara Azhvar (place where Azhvars join the feet of the Lord, is called ‘Thiruvarasu’). As a token of respect, the temple authorities have aptly named this temple as Rajagopalaswamy Kulasekara Perumal temple. This is the Mukthi Sthalam of Sri Kulasekara Azhwar who was born in a King’s family but became an Azhwar. There is a separate shrine for him.
Tamilnadu Tourism
This Blog gives vivid description about places of interest in Tamil Nadu to help the the tourists visiting this beautiful and enchanting State.
Rajagopala Swamy Temple, Mannarkoil
Legends
Kulasekara Azhvaar:
Kulasekara Azhvaar who was born in Thiruvanjikalam went on to become a Chera King. During his early years, he defeated Chozha and Pandya kings and was a dominant force. However, his devotion to Lord Vishnu led him to renounce power and to a path singing praise of the Vaishnavite Lord. After trips around several Vishnu temples, Kulasekara Azhvaar finally reached Mannar Koil, where he was taken in by the beauty of Vedanarayana, in whom he saw the Lord Ranganatha of Srirangam. Like Srirangam, Mannar Koil too is surrounded by two rivers on either side -Thamarai Barani on the Southern side and Karuna River on the Northern side.
Staying here at Mannar Koil for over 30 years, Kulasekara Azhvaar undertook daily pooja of Lord Rama, who was his abisheka deity, and finally attained Moksham at this place. To this day, one finds the idols of this Abisheka moorthy at this temple. In recognition of his efforts here at Mannar Koil, this temple has come to be known as Kulasekara Perumal Koil, the only historical Perumal Koil to be directly named as an Azhvaar Perumal Koil.
His shrine is unusually provided with flag post and Bali peetam. Surprisingly Pandya country is known for many 'Thiruvarasus' of Azhwars: Nammazhvar Thiruvarasu at Azhvar Thirunagari (Tamarind Tree), Periazhwar Thiruvarasu at Alagarkoil; Tirumangaiazhvar Thiruvarasu at Thirukkurungudi (Malaimel Nambi). Incidentally, Vibheeshana had also been drawn in to Lord Vedanarayana of Mannar Koil.
Rajendra Vinnagaram:
This place is also referred to as Veda Puri (after Veda Narayana Perumal) and Rajendra Vinnagaram (the great Chozha king who built/renovated this temple).
Sacred Shenbaga Flowers:
In his praise of Lord Vishnu in the Nalayira Divya Prabhandham, Kulasekara Azhvaar refers only to Shenbaga flowers and hence this flower is said to be very sacred.
People worshipped Lord Vishnu here:
The present temple region was once dense with Jack trees. Sages Bhrigu and Markandeya visited many Perumal temples and came to this place for penance. Pleased with their penance, Lord Perumal granted darshan. The sages wished that Perumal should be equally merciful to all devotees visiting this place and bless them with family happiness and prosperity. Responding to their wishes Perumal consented to stay here as Lord Veda Narayana. Later, Chera, Chola and Pandya kings improved the temple. Vibishana too worshipped Lord Vedanarayana here.
Avathara Sthalam of Azhagiya Manavala Jeer:
Mannarkoil is the birth of Vaadhi Kesari Azhagiya Manavala Jeer who provided detailed vyakyaanam (explanation/description) of Divya Prabhandham known as ‘Pannirayirapadi.
Tamilnadu Tourism
This Blog gives vivid description about places of interest in Tamil Nadu to help the the tourists visiting this beautiful and enchanting State.
Rajagopala Swamy Temple, Mannarkoil
History
In the 10th century A.D., after the Chola conquest of Pandyan country, the riverine of Tamirabarani - Ghatana Nadi was established as a Chola colony. Jatavaraman alias Sundara Chola Pandya (1017-18 A.D), aka Chola Viceroy (feudatory of the Rajendra Chola I) formed new townships and converted the forest lands for cultivation. Rajagopalaswamy Kulasekara Azhwar temple, a Chola temple in the land of Pandyas, was built by Chera king Rajasimha (1028- 1043 A.D.) with the permission of Rajendra Chola I. The Chera has also donated land to the temple at a later date.
The village is also known as Rajendra Chola Vinnagaram, named after the Chola monarch Rajendra Chola I, who has made significant contribution to the temple. Jatavarma Chola Pandya has also made considerable contributions. Finally there are contributions from Nayaka rulers. The temple has a very unique architectural design. Unlike the majority of the temples which have only one main sanctum enshrining the presiding deity, Mannarkoil has three vertically aligned sanctums, all facing east, one above the other, each housing one image of Lord Vishnu. The canonical texts call this style as Ashtanga vimana.
The inscriptions at the Veda Narayana Perumal temple at Mannarkoil village informs us that the big Brahmadeyam village of 'Rajaraja Chadurvedi Mangalam' in Mullinadu in the 'Mudikonda Chola Valanadu' of Raja Raja Pandinadu was made over to Brahmins as gifts. The hamlets of 'Ilangokudi' (today's Ambasamudram), Kallidaikurichi, Aththala Nallur, Vazuthiyoor, Alwarkurichi and Pappankurichi were parts of this big Brahmadayam village (now Brahmadesam)
Tamilnadu Tourism
This Blog gives vivid description about places of interest in Tamil Nadu to help the the tourists visiting this beautiful and enchanting State.
Home
▼
Saturday, May 6, 2017
Rajagopala Swamy Temple, Mannarkoil – The Temple
Rajagopala Swamy Temple, Mannarkoil – The Temple
The east facing temple has single entrance and two prakarams, an Ardhamandapam, Mahamandapam, connecting Mandapam surrounded by a cloister mandapa around the main sanctum. The temple is situated in between the Tamirabarani river in south and Kadana river in north. Presiding deity Lord Vedanarayana Perumal’s idol is made of Sudha type with herbals. He blesses the devotees from the sanctum sanctorum in a standing posture holding the conch (sankha) and discus (chakra) in his upper hands.
The lower right hand is in abhaya hasta mudra and lower left hand resting on his hip and flanked by Ubhaya Nachiyar (Sri Devi and Bhu Devi). The two sages Markandeya and Bhrigu also appear with folded hands. He appears in sitting posture in the first stage of the Ashtanga Vimana and in reclining posture in the stage still above – thus Perumal graces devotees in three postures – standing, sitting and reclining. The place is named Vedapuri as the sound of Vedas is always heard here.
Opposite the Sitting Perumal, there is a small hole called Pillai Thondu – Thondu means way in Tamil. Women seeking child boon pass through this hole to realize their wish. On the roof of the wooden Mandapa opposite the Reclining Perumal, all the 12 zodiac signs are sculpted so realistically. The temple is built with lime mortar mixed with palm sugar – Karuppatti in Tamil. Around the Sitting Perumal is the prakara called Yanai Thondu (broad elephant path) and a small path called Poonai Thondu (narrow cat path) around reclining Perumal.
The Rajagopalaswamy, the bronze processional deity appears along with goddess Andal and Garuda in the main sanctum. Also there are bronze icons of Sri Rama, Sita, Lakshmana and Hanuman found in this sanctum. A small and cute Garuda idol is located before the main sanctum. Also there are flagstaff and Balipeeta before the sanctum. There are separate shrines for goddesses Vedhavalli and Bhuvanavalli in the circumambulatory path. The circumambulatory path also has separate shrines for Lord Narasimha and Visvakshena.
The stucco images of both the goddesses appear seated. Vaishnava saint Kulasekara Azhvar (stucco image) is enshrined in a separate shrine in the northern prakara with separate flagstaff and Balipeeta before the sanctum. The sanctums of two Vaishnava Acharyas Ramanuja and Manavala Mamunigal are located in two separate Mandapams. This elaborately decorated structure exhibits typical of the Nayaka architectural style with exquisitely carved composite pillars. Sthala Vriksham is Jack tree (Artocarpus heterophyllus). Theertham of this temple are Tamirabarani river, Ghatana river, Bhrigu Theertham.
There are life size statues of Lord Rama and other gods, kings with folded hands forming part of the monolithic pillars. Just above the foundation inscriptions at regular intervals are little squares of about 5" x 5", which have scenes of Ramayana sculpted on them, like Gopurapatti. A few other scenes were are present. The yali row was indeed exquisite. Some of them had riders on them. In their midst were some elephants as well.
Ashtanga Vimana (Eight limbs or organs) architecture, one of the very ancient styles of temple construction, is radically distinctive vimana style of this temple. It is structural different from Sashtanga (six limbs or organs) vimana. Both the vimana and koshtam has Dhakshinamoorthi (a form of Lord Shiva). Vali worshiping Shivalingam and a dancing Ganesha sculpture are a masterpiece here.
Temple Opening Time
The temple is open from 7.00 a.m. to 11.00 a.m. and from 5.00 p.m. to 7.30 p.m.
Festivals
The temple celebrates the following festivals;
· 10 days Brahmotsavam in Chithirai (April-May)
· Procession of Azhvaar in Pushpa Pallakku in Thai
· Theppotsavam in Masi (February-March)
· Pre event practice session of Kaisika Puranam for the Thirukkurungudi
Prayers
As this is a holy land with echoes of Vedas, the main prayer is to shine in academic pursuits on strong educational foundation. People also pray for wedding boon, welfare of children causing concern, family welfare and improvement in occupations.
Contact
Sri Rajagopalaswamy Temple,
Mannarkoil, Thirunelveli District
Phone: +91 4634 252 874 / 318 408
Connectivity
Mannarkoil is located at about 7 Kms from Ambasamudram off the Tenkasi – Courtallam Highway. Ambasamudram is 37 Kms from Tenkasi, 12 Kms from Veeravanallur, 47 Kms from Thirunelveli, 206 Kms from Madurai and 143 Kms from Thiruvananthapuram. Mini buses and autos are available from Ambasamudram. Buses are available for every 15 minutes from Thirunelveli new bus stand to Ambasamudram/Papanasam. One can reach the temple in an hour from Thirunelveli.
Those travelling by buses from Thirunelveli and Ambasamudram bound to Tenkasi should get down at the Mannarkoil Vilakku stop and walk a KM to reach the temple. Nearest Railway Station is located at Ambasamudram. Nearest Airport is located Madurai and Thiruvananthapuram.
திருவரங்கத்தில் இருபுறமும் காவிரியும் கொள்ளிடமும் சூழ அனந்தசயனத்தில் அருள்பாலிக்கும் திருவரங்கநாதருக்கு இணையான மகிமையுடன் திகழ்கிறார், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகில் கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு ராஜகோபால சுவாமி.
ஆம், இப்பகுதியில் என்றும் வற்றாத ஜீவநதிதாம் தாமிரபரணியும், கடனா நதியும் சூழ்ந்து திகழ, நடுவே இயற்கை எழிலுடன் விளங்குகிறது அருள்மிகு ராஜகோபாலசுவாமி குலசேகர ஆழ்வார் திருக்கோயில்.
இக்கோயிலில், அஷ்டாங்க விமானத்தின் கீழ் நின்ற, இருந்த, சயனக் கோலங்களில் அருள்கிறார் ஸ்ரீமந் வேதநாராயணன்.
காலங்களை வென்று நிற்கும் இந்தப் புண்ணிய பூமியின் புராணம், யுகங்களைக் கடந்த கதையைக் கொண்டது. பல்வேறு காலகட்டங் களில் மன்னர்கள் பலராலும் திருப்பணிகள் செய்யப்பட்டு, கம்பீரமாக விளங்கும் இந்தக் கோயில், என்று தோன்றியது என்று கணக்கிட்டுச் சொல்ல முடியாதபடி தொன்மை வாய்ந்ததாம்.
சப்த ரிஷிகளில் ஒருவரும் பிரஜாபதிகளில் முக்கியமானவருமான பிருகு மகரிஷி, தட்ச பிரஜாபதியின் மகளான கியாதியை மணந்தார்.
ஒரு தருணத்தில் கியாதி, அசுரர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததால், மகாவிஷ்ணு தன் சக்ராயுதத்தால் கியாதியின் சிரத்தை அரிந்தார்.
அதனால் கோபம் கொண்ட பிருகு, ‘நான் மனைவியை இழந்து தவிப்பது போல, பரந்தாமனும் பூமியில் பிறந்து மனைவியை இழந்து தவிக்கட்டும்’’ எனச் சாபம் கொடுத்தார்.
ஆனாலும் நாழிகை கடந்து சினம் தணிந்த பிறகு, பரந்தாமனைச் சபித்துவிட்டதை நினைத்து மனம் வருந்தினார். பெரும் தவறிழைத்துவிட்டதாகக் கலங்கியவர், அதற்குப் பரிகாரமாய் ஆழ்ந்த தவத்தில் மூழ்கினார்.
மகரிஷியின் வாக்கு பொய்க்கக் கூடாதே. ஆகவே, அவரின் சாபத்தை ஏற்று ஸ்ரீராமனாய் அவதரித்து சீதையைப் பிரிந்து வாடினார் பகவான். பின்னர் அவளை மீட்ட பிறகு, பிருகு மகரிஷி வேண்டிக்கொண்டதற்கு இணங்கி, அவருக்குத் திருகாட்சி அருளினார்.
அப்படி அவர் காட்சி தந்த பொதிகை மலை தீரத்தில், ஸ்ரீவேத நாராயணனையும் ஸ்ரீதேவி, பூதேவியையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் பிருகு.
அவர் தன்னுடைய கொள்ளுப்பேரனான மார்க்கண்டேயனுடன் இணைந்து வேதங்கள் ஓதி இத்தலத்துப் பெருமாளை வழிபட்டதாகச் சொல்கின்றன புராணங்கள். ஆகவே, இதற்கு `வேதபுரி’ என்றும் ஒரு திருப்பெயர் உண்டு.
இக்கோயிலில், மூலவரான அருள்மிகு வேதநாராயணன் அருகிலேயே பிருகுவும் மார்க்கண்டேயரும் இருப்பதைக் காணலாம். இந்த மூலவர் சுதை வடிவில் வர்ணகலாபத்துடன் விளங்குகிறார்.
ஆகவே அவருக்கு அபிஷேகம் கிடையாது. உற்சவருக்கே திருமஞ்சனம். உற்சவமூர்த்தியான ஸ்ரீராஜ கோபால சுவாமியின் அருகில் கருடாழ்வாரும் ஆண்டாளும்... ஸ்ரீவில்லி புத்தூரில் இருப்பதுபோலவே காட்சியளிப்பது சிறப்பு.
ஆலயத்தில் தனிச் சந்நிதியில் அருள்கிறார் ஸ்ரீவேதவல்லித் தாயார். அருகிலேயே ஸ்ரீயோக நரசிம்மர் சந்நிதியும் ஸ்ரீபுவனவல்லித் தாயார் சந்நிதியும் அமைந்துள்ளன. தாயார் சந்நிதிக்கு அருகில் பரமபத வாசல் உள்ளது.
ஆலயச் சிற்பங்களும், கட்டுமான அமைப்பும் வியக்கவைக்கும் அழகுடனும் நுட்பத்துடனும் திகழ்கின்றன. ராமாயணக் காலத்தில் விபீஷணரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமிது என்கிறார்கள்.
9-ம் நூற்றாண்டில் தென்பகுதியை ஆண்ட சேர பேரரசன் குலசேகரன். இந்த மாமன்னன் அரச பதவி வேண்டாம், பெருமாளின் திருவடியைத் தொழும் பாக்கியமே வேண்டும் என்று இறைப்பணியில் தன்னை அர்ப்பணித் துக்கொண்டு, பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரானார்.
`நெடியானே வேங்கடவா நின்கோயிலின் வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய்க் காண்பேனே...’
திருப்பதியில் படியாகக் கிடந்தாயினும் உன்னைச் சேவிப்பேன் என்று பாடிப் பரவியவர் குலசேகர ஆழ்வார். இவர், தம்முடைய இறுதிக் காலத்தில் இத்தலத்தில் இறைவனை வழிபட்டு முக்தியடைந்தாராம்.
அவருடைய திருவரசு (ஜீவசமாதி) இத்திருக் கோயிலின் உள்ளே ஸ்ரீகுலசேகரஆழ்வார் சந்நிதியாக விளங்கு கிறது. குலசேகர ஆழ்வார் வழிபட்ட ஸ்ரீராமன், சீதா, லட்சுமணன் ஆகியோர் அர்த்த மண்டபத்தில் அருள்கின்றனர்.
குலசேகர மன்னன் திருப்பணிகள் பல செய்து வந்ததால், அவரையும் இத்தலத்தின் ஸ்ரீராஜகோபாலனையும் தொடர்ப்புப் படுத்தி, `மன்னனார் கோவில்’ என்று அழைக்கப்பட்டதாம் இவ்வூர். தற்போது அப்பெயர் மருவி `மன்னார்கோவில்’ என்று வழங்கப் படுகிறது.
திருக்கோயிலின் பிராகாரத்தில் ஸ்ரீகண்ணன், ஸ்ரீகாட்டுமன்னார், ஸ்ரீசக்கரத்தாழ்வார், பன்னிரு ஆழ்வார்கள், ஸ்ரீராமாநுஜர், ஸ்ரீமணவாள மாமுனிகள் ஆகியோர் அருள்கின்றனர்.
கி.பி. 1024-ல் ராஜேந்திர சோழனால் இந்தக் கோயிலுக்குப் பல சுற்றுச் சுவர்கள் கட்டப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டன. ஆகவே இத்தலம் ராஜேந்திர விண்ணகரம் எனச் சிறப்பிக்கப்பட்டது.
பிற்காலத்தில் நாயக்க மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டன- வெளிப் பிராகார சுவர்கள் கட்டப்பட்டன.கோயிலின் பந்தல் மண்டபத்தில் முத்துகிருஷ்ண நாயக்கர் சிலையும், அவருடைய தளவாய் ராமப்பய்யன் சிலையும் உள்ளன. மண்டப முகட்டில் பாண்டியர்களின் மீன் சின்னத்தையும் காண முடிகிறது.
ஸ்ரீராமானுஜருக்குக் குருவாக விளங்கிய பெரியநம்பிகளின் பரம்பரையினர் சுமார் 900 ஆண்டுகளாக இந்த ஆலயத்தில் இறைப் பணிகள் செய்து வருகின்றனர். குலசேகர ஆழ்வார் சந்நிதியில் உள்ள கல்வெட்டு இதைப்பற்றி குறிப்பிடுகிறது. அந்த வம்ச வழியில் வந்த நரசிம்மகோபாலன், தற்போது பகவானுக்கான சேவைகளை செய்து வருகிறார்.
இத்தலத்துக்கு வேறொரு சிறப்பும் உண்டு. நாலாயிரதிவ்ய பிரபந்தத்துக்கு உரை எழுதிய வாதிகேசரி ஸ்ரீஅழகிய மணவாள ஜீயர் அவதரித்ததும் இந்தத் தலத்தில்தான்.
மேலும், திருநெல்வேலி- பாளையங்கோட்டையில் இருக்கும் ஸ்ரீவேத நாராயணன் கோயிலுக்கு மூலமாக விளங்குவது இந்தத் திருக்கோயில் என்றும் சிலிர்ப்போடு தகவல் சொல்கிறார்கள், பக்தர்கள்.
நெல்லைச் சீமைக்குச் செல்வோர், அவசியம் இந்தத் தலத்துக்க்குச் சென்று பெருமாளையும் ஆழ்வாரையும் தரிசித்து அருள்பெற்று வாருங்கள்; பெருமாளின் திருவருளால் உங்கள் வாழ்வில் ராஜயோகம் கூடிவரும்; தடைகள் நீங்கி, முன்னேற்றம் உண்டாகும்.
எப்படி செல்வது?: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து தென்காசி செல்லும் சாலையில், சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது மன்னார் கோவில். அம்பாசமுத்திரம் நகரிலிருந்து பேருந்து, மினிபஸ் வசதிகள் அடிக்கடி உண்டு.
"ஸ்ரீராஜகோபால சுவாமி திருவடிகளே சரணம்"
Comments
Post a Comment