Temple info -182 Sundarakamakshi temple, Sirukarumbur. சுந்தரகாமாக்ஷி கோயில், சிருகரும்பூர்
Temple info -182
கோயில் தகவல் -182
Sundara Kamakshi Temple, Sirukarumbur, Vellore
Sundara Kamakshi Temple is dedicated to Hindu God Shiva located at Sirukarumbur village near Kaveripakkam in Kanchipuram District of Tamilnadu. Presiding deity is called as Thirupuranthaga Easwarar. Mother is called as Sundara Kamakshi. Mother is given importance over Lord Shiva. This is one of the Kamakshi’s installed by Adhi Shankara.
The temple with great religious importance as well as beautiful icons is situated in a very beautiful ambiance amidst green fields. From the outside, it looks like a small village temple. Indeed it’s a small temple with just a Shiva and Ambal shrine, both not so big, but it is a hidden treasure trove for devotees, heritage and art lovers with so many unique features.
History
In this small village the historical temple was covered with sand due to the foreign invasion. During 1958 Baskara Tondaiman the Vellore collector took initiative to uncover the sand and find out what is the hidden treasure behind this sand hill.
It is also said that erstwhile Kanchi Periyava visited it during the 1970’s as he stayed here and did pooja to Sundara Kamatchi. He was instrumental in conducting the Kumbabishekam in 1980. The sculpture and shape of the temple suggest that it belongs to the chola period. It is also believed that one the earliest Hindu guru Adisankara visited this place and installed the Sundarakamatchi.
The Temple
Lord Shiva here is called Sri Thirupuranthaga Easwarar as Swayambu lingam and Ambal is Sri Sundara Kamakshi. The Linga is Swayambhu. Though this is a Shiva Temple, importance is for Sundara Kamakshi Ambal and she is very beautiful, as the name signifies. Unlike Kamakshi Ambal in other temples, here she is in a standing posture. Sri Adhi Sankarar had visited this place and installed the Sri Chakra in front of her. The Srichakra has the presence of Ashtadhik Balagars in it.
The Ambal shrine is totally different. It is built of green granite stones and its goshta walls are completely filled with exquisite carvings and very rare and special moorthies. The Devi Temple stands close to the Easwara Temple and is made of green stone. A lot of dilapidation had been there and renovation has been done and is still taking place. A few stones have been arranged near the wall inside the Temple that shows the glory of the Temple. The sculptures here are intricate in places and worth seeing.
Normally, one would find a Peepal tree and a Neem tree growing together in many Temples. Here you find a tall Bilva tree (Aegle marmetos / Stone apple/ Bael/Shivadruma)branching into three trunks three feet above ground level and a Neem Tree growing through the space between the Thrisul like trunks. Vilva represents Lord Siva and the Neem Tree, the Devi. Puja is done here by couples who wished to be blessed with children. Under the trees is a huge Linga which had been brought here from a distant hill.
There are sculptures in relief of Naga and fish on the ceiling of the Mandapa just outside the Garbha Griha which implies that those with Naga dosha can get rid of them by worshipping the Devi here. There is a Sannidhi for Lord Ganesha, Lord Karthikeya, Lord Bhairava and the Nava Grahas. Fearing attacks from the invading forces, the people here had covered the Temple with sand and mud in the early nineties and this Temple was exposed to people only in the year 1958. This is one of the Kamakshi’s installed by Adhi Shankara.
The sanctum Sanctorum of Lord Siva abounds in sculptures too and so does that of the Devi. At the inner entrance to Shiva shrine there are icons of Sage Patanjali on the right side and Sage Vygrapathar on the left. On either side of the innermost entrance to the Shiva shrine there are icons of male and female versions of Purusha mirugas in the posture of doing poojas. They are considered to be present always and doing the daily poojas to Easwarar.
Lord Veera Badhrar inside the Shiva shrine has a Shiva linga on his forehead. Lord Dakshinamurthy here is unique. He has in his Jata, sixty three tiny Lingas which the Priest refers to as the 63 Saiva- Devotees called the Nayanmars, who have sung praises of the Lord.
Inscriptions
Stone inscriptions dating back to the 10th and 11th century AD in the Temple throws light on the way records of properties were maintained during the Chola times. The stones disclosed the many agreements reached between different groups of people for endowments and upkeep of the temple. The inscriptions also revealed that there were Chola bronze images, consecrated and worshipped in that temple.
One of the stone documents recorded that a bronze idol of Umaparameswari, consort of Lord Nataraja, was installed and worshipped by the villagers in the year 1013 AD, the 28th year of the reign of Rajaraja Chola-I, in the temple. The stone records also brought to light the agreements reached by a group of people in the village to endow paddy for the upkeep and maintenance of the temple.
Names of the people of the community like Arunan, Ezhilan Pondhai, Mani Nagan, and village posts like "Gramavitthan", mentioned in the stones, revealed that the temple had been a common holding of the community.
Contact
Sundara Kamakshi Temple,
Sirukarumbur, Kaveripakkam
Kanchipuram District
Mobile: +91 - 94863 70223 / 94860 60120
Connectivity
Sirukarumbur is located at about 3 Kms from Ocheri, 16 Kms from Walajapet, 23 Kms from Arcot, 46 Kms from Vellore, 34 Kms from Arakkonam, 19 Kms from Thirumalpur, 6 Kms from Kaveripakkam and 97 Kms from Chennai. Sirukarumbur is located in the Chennai - Mumbai highway. The temple is located at a distance of about 400 meters from the Chennai – Bangalore highway at the Sirukarumbur junction between Ocheri and Kaveripakkam. The Sirukarumbur junction is 1 km after Ocheri junction; 2 kms before Murugan Idly Shop; and around 4 kms before Kaveripakkam while going from Chennai. Nearest Railway Station is located at Thirumalpur and Arakkonam. Nearest Airport is located at Chennai.
சிறுகரும்பூர் ஸ்ரீ திரிபுரஸுந்தரி - த்ரிபுராந்தகேஸ்வரர் - ஸ்ரீ சுந்தர காமாக்ஷி அம்பாள் ஆலயம்:
நின்ற கோலத்தில் இருக்கும் அதிசய காமாக்ஷி அம்மன் மற்றும் ஸ்ரீசக்ர திருக்கோவில்!
சிறுகரும்பூர் ஸ்ரீ திரிபுரஸுந்தரி - த்ரிபுராந்தகேஸ்வரர் - ஸ்ரீ சுந்தர காமாக்ஷி அம்பாள் ஆலயம்:
காஞ்சிபுரம் நகரில் இருந்து கீழம்பி - திருப்புட்குழி வழியாக வேலூர் செல்லும் பெங்களூரு பிரதான சாலையில், காஞ்சிபுரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில், ஓச்சேரி என்ற கிராமத்திற்கு அடுத்து அமைந்துள்ள ஊர், சிறுகரும்பூர்.
இங்கே அமைந்துள்ளது, சுந்தர காமாக்ஷி அம்பிகை ஆலயம். கிட்டத்தட்ட 1500-2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம்.
கோவிலை தற்போது பூஜித்தும்,பராமரித்து வரும் நவீன்குருக்கள், கோவிலை பற்றி நமக்குதெரிவித்தார். அவர் கூறியமகத்துவங்கள் இதோ :
- வ்யாக்ரபாதர் பூஜித்த ஸ்வயம்புவலிங்கம் இங்குள்ள ஸ்வாமி.பார்த்தாலே நன்கு அறியலாம், கீழேபரந்தும், மேலே குறுகியும், பிடித்துவைத்தது போன்ற லிங்க மூர்த்தி.கஜப்ருஷ்ட விமான அமைப்பின் கீழேஇருக்கிறார். .
- தல மரம் - சரக்கொன்றை பரமேஸ்வரருக்கு பரம இஷ்டமான மரம்.
-இங்குள்ள தக்ஷிணாமூர்த்திரொம்பவும் மஹிமை பெற்றவர்.அம்பிகை தன்னுள் பாதியாக உள்ளதைஅறிவிக்க, ஒரு காதில் மகரக்குழையும்,மறுகாதில் தோடும் அணிந்திருக்கிறார்.தொண்டர் தம் பெருமையைசொல்லவும் பெரிதே என்ற வாக்கிற்கிணங்க, இவ்வாலயத்தில்அறுபத்து மூவரும் இல்லை. மாறாக,அறுபத்து மூவரும்,தக்ஷிணாமூர்த்தியுடைய தலைசடையில் 63 லிங்கங்களாக காட்சிதருகிறார்கள்.
அதாவது, சிவனை வழிபட்டுசிவமாகவே ஆனதால் லிங்கமாகவும்,அடியார்களை இறைவன் தலை மீதுவைத்து பிள்ளை போல்கொண்டாடுவார் என்பது போல், அவர்தலையிலும் இருப்பது, பக்திக்குமரியாதை.
கோவிலில் ஓரிடத்தில் வில்வமும்வேம்பும் ஒன்றாய்வளர்ந்திருக்கின்றன. வேப்ப மரம்தனது கிளையை வில்வத்தின் மீதுபோட்டவாறு வளர்ந்திருக்கிறது.அம்பாள் சிவனுடைய தோள் மீதுகைபோட்டவாறு இருப்பது போல்இருக்கும். வில்வ மரம் மூன்றுகிளைகள் விட்டு சூல வடிவில்வளர்ந்திருக்கிறது. அடியில் ஒரு பெரியசிவலிங்கமும் அம்பாளும் உண்டு.
- தவிர அழகு வாய்ந்த விநாயகர்,சண்முகர், நவகிரஹங்கள் சந்நிதிகள்உண்டு.
- ஸ்வாமியின் சந்நிதியில் முழுக்க கல்திருப்பணி. விமானம் தவிர.அதேபோல், எங்கும் காணக்கிடைக்காத வகையில், அம்பாளுக்கு முழுவதும்பச்சைக்கல் கொண்டு சந்நிதிஅமைக்கப்பட்டுள்ளது.
- பச்சைக்கல்லுடைய மகிமையால்,அம்பாள் சந்நிதியில் உஷ்ணம்நிரம்புவதில்லை. எப்போதும் குளிர்ச்சியாக இருக்கிறது.
- அந்நியர்களின் படையெடுப்புக்குஅஞ்சி, முற்காலத்தில் எல்லாவிக்கிரஹங்களும் ஸ்வாமி சந்நிதியில்வைக்கப்பட்டும், பூமியில்புதைக்கப்பட்டும், மறைக்கப்பட்டன.கோவில் இருக்குமிடம் தெரியாமல்,மண்மேடு அமைத்து கோவிலைமூடிவிட்டனர். காலப்போக்கில் இங்குகோவில் இருந்ததே தெரியாமல்போனது.
- பிற்காலத்தில்(1954), காஞ்சி பெரியவர்களின் உத்தரவுப்படி, தொ. மு.பாஸ்கரத்தொண்டைமான் அவர்கள்,இங்கே அகழ்வுப்பணி மேற்கொண்டு,மண்மேட்டுக்குள் இருந்த சந்நிதியைகண்டுபிடித்தார்.
- அருகே இருந்த அம்பாள் சந்நிதிவெற்றிடமாக இருந்ததால், சிறுவர்கள்விளையாட சென்றார்களாம், ஆனால்எப்போது போனாலும் ஒரு சர்ப்பம்சீறிக்கொண்டு அவர்களை விரட்டியதாம். கோவில்கண்டுபிடிக்கப்பட்டதையும், சர்ப்பத்தின்சீற்றத்தையும் குறித்து, காஞ்சிமஹாபெரியவாளிடம் தெரிவித்ததைஅடுத்து, பெரியவாள் இங்கே விஜயம்செய்து, தரிசனம் செய்தார்களாம்.
- அம்பாள் சந்நிதிக்கு வந்த அவர் (17-04-1978), விக்ரஹம் இல்லாதபோதும்சாந்நித்தியம் இருப்பதால் தான் சர்ப்பம்யாரையும் நுழையவிடாமல் தடுப்பதாகஅறிந்தார். அதே போல், அங்கே ஒருஅழகிய சிவலிங்க ஆவுடையாரின் மீது,கல்லிலேயே அம்பாளுடைய ஸ்ரீசக்ரயந்த்ரம் இருந்தது. இதைக்கண்டபெரியவாள், அங்கிருந்தநெருஞ்சிமுட்களின் ஊடே, தர்ப்பைபாயை விரித்து, அமர்ந்துவிட்டார். 3நாட்களுக்கு அங்கிருந்துவிலகவில்லை. பின்பு, உடனேதிருப்பணி துவங்க அனுக்கிரஹம்தந்தார். காஞ்சியை சேர்ந்த சுப்பையா ஸ்தபதி இதைமேற்கொண்டு செய்தார்.
- திருப்பணி நிறைவடையும் நேரம்,தரைத்தளம் போட தரையை தோண்டியபொழுது, மேலும் ஒரு அம்பாள்சிலையும், அம்பாள் சந்நிதிவிமானத்திற்கும் சுவருக்கும் இடையேவர வேண்டிய மேல் வரிசைசிற்பக்கற்களும் கிடைத்தன.கர்ப்பத்தில் இருக்கும் சிசு, தாயும்தந்தையும் சிசுவோடு இருத்தல் எனபலவித சிற்பங்களை கொண்டஅக்கற்களை இன்றும் பிரகாரத்தில்காணலாம். விமானம் எழுப்பப்பட்டகாரணத்தால் அவற்றை மேல்வரிசையில் வைக்க இயலவில்லை.
புதிதாக கிடைத்த அம்பாள்திரிபுரசுந்தரி என்றும், அவள்தான்த்ரிபுராந்தகேஸ்வரஸ்வாமியின் போகசக்தி அம்பாளென்றும், சுந்தர காமாக்ஷி, தானே சிவசக்திஐக்கியமான ராஜராஜேஸ்வரிஅம்சமென்றும் பெரியவாளால்தெரிவிக்கப்பட்டு, அவ்வாறே சுவாமிசந்நிதிக்குள்ளேயே தெற்கு நோக்கிதிரிபுரசுந்தரி அம்பாளும், தனிபச்சைக்கல் சந்நிதியில் கிழக்குநோக்கி ஸ்ரீ சக்ர பீடத்தோடுசுந்தரகாமாக்ஷி அம்பாளும்அருள்கின்றனர். 1984ல் கும்பாபிஷேகம் காஞ்சி புதுப்பெரியவர்கள், கிருபானந்த வாரியார் ஆகியோர் முன்னிலையில் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
அம்பாள் ஐக்கிய ரூபத்தில்ஸ்ரீசக்ரபீடத்தோடு இருக்கும்கோவில்களில் ( திருவாரூர்,திருநாகேஸ்வரம், சிதம்பரம்)கண்டிப்பாக ஒரு காவல் தெய்வம்உண்டு. சாஸ்தா, பைரவர், வீரபத்ரர்என யாராவது இருப்பர்.
- இங்கேயும், தக்ஷனுக்கு ஆட்டுத்தலைதந்து, அனுக்கிரஹம் செய்தகோலத்தில் அனுகிரஹ வீரபத்ரர்அம்பாளுக்கு எதிரே இருக்கிறார். அவர்சிரசில் சிவலிங்கம் தாங்கியவாறுகாணப்படுகிறார்.
- ஸ்வாமி சந்நிதியில் விலகி இருக்கும்நந்தியும், சுவற்றில் பாதி புலி உடல்கொண்ட ஆண் ஒருபுறம் தீபம்காட்டுவதாகவும், பாதி புலி உடல்கொண்ட பெண் மறுபுறம் தூபம்காட்டுவதாகவும் சிற்பங்கள் உள்ளன.
- சுந்தரகாமாக்ஷி அம்பாள், கிட்டத்தட்ட 6அடி உயரம். கைகளில் பாசாங்குசம்அபய வரதத்தோடு கூடிய பேருக்கேற்றஅழகு சொட்டும் திருமேனி.
- முன்னே லிங்கபீடத்தில் ஸ்ரீசக்ரம்.அம்பாளுக்கு கால்களுக்கு இடையேத்வாரமும், அதன் மூலம் கொலுசுசார்த்தும் வழியும் உள்ளது.
- அம்பாளுடைய முகலாவண்யம்சொல்லில் அடங்காதது. அங்கேசென்று நின்றுஅனுபவிப்பவர்களுக்கே அதன்உள்ளர்த்தம் புரியும். அபிஷேகத்தில்தலையில் ஜலம் விடும்போது,கண்களை மூடிக்கொள்வது போலவும்,ஜலம் வடிந்தவுடன் மீண்டும் கண்களைதிறந்துகொள்வது போலும் காட்டி,அம்பாள் ஜாலம் பண்ணிக்கொண்டேஇருக்கிறாள்.
- அம்பாள் பராசக்தியாக,ஸ்ரீவித்யாமூர்த்தி ஆக இருப்பதால்,வாசலில் சுவர்களிலும் தூண்களிலும்,கணபதி, ஸ்கந்தர், லட்சுமி, சரஸ்வதி,இரண்டு குதிரைகளோடு சாமரம் வீசும்அஷ்வவல்லி, இரண்டு யானைகளோடுசாமரம் வீசும் கஜவல்லி (அச்வாரூடைசம்பத்கரி என்றும் கொள்ளலாம்)ஆகியவர்கள் காட்சி தருகின்றனர்.சுவர்களின் இடையே ஒரு மாடத்தில்வாழைப்பழம் உரித்துசாப்பிட்டுக்கொண்டு, அம்பாளைநோக்கியவாறு, அவள் உத்தரவுக்கு காத்திருக்கும் கோலத்தில்,அமர்ந்திருக்கும் குழந்தை ஆஞ்சநேயர்கூட அழகு தான்.
தற்போது பூஜிக்கும் நவீன்குருக்களுடைய தந்தை, சந்திரசேகரகுருக்கள் 10 வயது சிறுபிள்ளையாகஇருந்தபோது, மஹாபெரியவாளிடம், "இந்த அம்பாளுக்கேன் காமாட்சின்னுபேர்? #காமாக்ஷி #காஞ்சிலேஉக்கார்ந்துண்டு #தானே #இருப்பா? "என்று கேட்டுள்ளார். அவருக்குபெரியவாள் அளித்த பதில்:
"இப்போ, உன் அம்மா எங்கயோஉக்கார்ந்துண்டு இருக்கா, நீ போய்தூத்தமோ #காபியோ கேக்கறே... என்னபண்ணுவோ.. #பொறுமையா #இதோ #வரேன்னு சொல்லிட்டு, #எழுந்துவந்துபோட்டுத்தருவோ... ஆனா, இந்தகாமாக்ஷி பாவம், எதையாதுகேட்டுண்டு வர்ற #கொழந்தேளுக்கு,உடனே கொடுத்துடணும் னு #ஆசையாம். அதாவது, #உக்கார்ந்துண்டு #இருக்கறவ #எழுந்துவர்ற #கொஞ்ச #காலதாமதம் #கூடஅவளுக்கு பண்ண #விருப்பம்இல்லையாம். #அதான் #நின்னுண்டுஇருக்கா" .
கேட்டதை கொடுக்க காத்திருக்கும்காமாக்ஷி
அம்பிகையை,த்ரிபுராந்தகரை, த்ரிபுரஸுந்தரியைகாண சென்று வாருங்கள். முடிந்த வரைஆலயத்தின் பாதுகாப்புக்கும்,அபிஷேக அலங்காரங்களுக்கும்பொருட்களை தந்து,பணி செய்யுங்கள்.
ஆலயத்தில், நித்யபூஜை, தீபம் ஏற்ற எண்ணெய், சந்தனம் குங்குமம் மற்றும் அபிஷேகப்பொருட்கள் ஆகியவை உள்பட, பல்வேறு கைங்கர்யங்களில் உதவி தேவைப்படுகிறது. செய்ய சக்தியும், மனமும் விருப்பமும் உடைய அன்பர்கள், கீழே தந்துள்ள ஆலய அர்ச்சகரை தொடர்பு கொண்டு, அல்லது நேரில் சென்றோ முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
காலம் காலமாக கருணை பொழியும் காமாக்ஷி அம்மை, நம்மை நிச்சயம் கடைத்தேற்றுவாள், வேண்டிய வரம் தருவாள். #காமாக்ஷியைநம்பினோர் #கைவிடப்படார். காப்பது #அவள்கடன்.சுந்தர காமாக்ஷி #சுபிக்ஷம் தரட்டும்!
தொடர்பு விவரங்கள் : ஆலய அர்ச்சகர் நவீன் சுந்தர் குருக்கள் - 9791505077, 9486060120, 9486370223
Comments
Post a Comment