Temple info -175 Bairagimadam Prasannavenkatesaperumal temple. பைராகிமடம் ப்ரஸன்ன வெங்கடேச பெருமாள் கோயில்
Temple info -175
கோயில் தகவல் -175
Bairagi Madam Prasanna Venkatesa Perumal Temple, Sowcarpet, George Town, Chennai.
Bairagi Madam Prasanna Venkatesa Perumal Temple is a Hindu Temple dedicated to Lord Vishnu located in Sowcarpet in George Town area of Chennai, the capital of the South Indian state of Tamil Nadu. Presiding Deity is called as Prasanna Venkatesa Perumal / Tiruvengamudaiyan and Mother is called as Alamelumangai. Bairagi Mutt is one of the Abhimana Kshetram located in Sowcarpet, Chennai, Tamilnadu. This is one of the prominent temple of Lord Venkateswara was built by a Bairagi/saint, a zealous devotee of Lord Venkateswara who had envisioned Lord Venkateswara of Tirupati.
Legend
Bairagi Madam Prasanna Venkatesa Perumal Temple, Sowcarpet, George Town
Many years ago, a Vishnu devotee, Laldas, a sanyasi lived in this area. Every day he would commence his work after meditating on and praying to the Lord of Tirupati. He also had the habit of rendering service as far as he could, to those devotees who went on pilgrimage along this way. For a very long time he nourished a wish in his mind, to go to Tirupati and worship the Lord. But it could not be fulfilled. In course of time this desire became a longing in his mind. The Lord decided to grace him. One night the Lord appeared in Laldas dream and asked him to erect a temple in the place where he lived.
The happy sanyasi commenced this work. But he had no money and so asked the people to help him build the temple. None was prepared to help him. So, by using his magical skill, he converted copper into gold. With the money by selling that gold, he began building the temple. People now understood his worth and then gave him money to build the temple. Then an image like that of Tirupati Venkatachalapathy was made and the temple was erected. The Lord manifested in the mind of Laldas and appeared before him. And thus, gained the name ‘Prasanna Venkatesa Perumal.
Bairagi Madam Prasanna Venkatesa Perumal Temple, Sowcarpet, George Town – History
Bairagi is a Hindu Vaishnava sect. It was arguably started by the saint Ramananda in the 14th century CE. There are four divisions of Bairagis, namely Ramanujis, Nimanandi, Vishnu Bairagi and Tyagi Bairagi. The Bairagis are found in large number in Nagpur and around in Maharashtra as well as Allahabad and around in Uttar Pradesh. As per the historian Shri S. Muthiah, it was probably this temple, which was referred as "Lorraine's Pagoda" in the Madras Map dated 1710 CE. He even believes that Kitti Narayana, the son of the famous Dubash Beri Thimanna, would have constructed this temple in the late 17th century CE. "Lorraine" was probably the anglicized form of Narayan.
The temple authorities have altogether different story. According to them, Bairagi Mutt was formed even before the British arrived Madras (Chennai). (Mutt, which is also written as Matha or Math, is more like a monastery for Hindu saints). Lal Das Ji, a Bairagi saint from Lahore (which is part of Pakistan nowadays), started this mutt in the early 1600s. He apparently cured the stomach ache of a rich Muslim woman. She donated gold coins to the saint, which he used to extend the mutt and built the temple of Venkatesa Perumal.
It appears that this temple might have been built by Bairagi saint and not by the Dubashi's son due to the following reasons: The temple is under the administration of the Bairagi community even today. The successors of Lal Das Ji (Mahants) still live in the mutt. The architecture of the temple resembles Vijayanagara or Nayaka period. There is no reason why a Dubashi in the British period would have followed this style of the architecture. The temple is magnificent with so many sub-shrines and hundreds of idols. There is no other temple in Madras built or contributed by the British or its Dubashis, which has so many number of sub-shrines. All such temples are very simple in layout and have only limited number of deities.
Bairagis are there all over India. In North India, wherever a mutt of Bairagi is found, an adjoining temple is also found, similar to this temple complex. But Kitti Narayana might have contributed to this temple. The temple is being referred as Lorraine Pagoda in the map. "Lorraine" was probably the anglicized form of Narayan. This Name is not based on Kitti Narayana but based on the Presiding Deity. Definitely, this Temple was not built by any Dubashi or Dubashi's family members.
The Temple
Bairagi Madam Prasanna Venkatesa Perumal Temple, Sowcarpet, George Town – The Temple
The temple has three sections. The Mutt which enshrines the North Indian style white marble idols is the first structure. It has an east facing entrance. The magnificent temple of Tiruvengamudaiyan Venkatesa Perumal is the second structure. It has three entrances in the east, north and south directions. Within this temple complex, near the temple tank, a small separate North Indian style temple is located. It has its own small entrance. In Sanskrit ‘Bairagi’ means ‘Sanyasi’. Since Perumal appeared before a Sanyasi, this holy place is known as ‘Bairagi Venkatesa Perumal Koil’. The Temple is administered by lesser known Bairagi sect.
Bairagi Mutt:
The mutt has east facing entrance. The sanctum enshrines very beautiful marble idols. The white marble idols of Ram with Lakshman on his right side and Sita on his left side is enshrined in the sanctum. (It should be noted that Ram has Lakshman instead of Sita on his true right side, which is not usual). Behind the idols of Ram Parivar, the black marble stone idols of Vishnu and his three consorts are found. Vishnu is normally found with his two consorts, namely Sri Devi and Bhoo Devi. However, in this sanctum, his third consort Neela Devi is also found.
Vishnu has two arms and holds conch and discus. He is found in the standing posture. All his three Devis are found seated. Each of them hold a kid on her lap, which is unusual. An idol of Krishna keeping his two arms in stylish way on his hip is also found in this sanctum. It is made of black marble. Few bronze idols of Krishna in various postures are also kept in the same sanctum.
The Tulsi Madam (the holy altar with the Tulsi plant) that is found in this mutt is one of the oldest surviving Tulsi Madams of Chennai city. The red colored idols of Hanuman and Ganesh are found in the prakara. A big red colored relief image of Hanuman found on the wall of this mutt is very interesting.
Temple Towers:
Adjoining to the Bairagi mutt, the main entrance of Tirvengadamudaiyan temple is located. It faces the east direction. Five-tiered tower with lot of interesting stucco figures is found at this entrance. The south facing entrance has three-tiered tower. There is another entrance at the north direction.
Mukha Mandapam:
The Mukha Mandapam is very long and wide. It is designed like a chariot. The pillars are full of figures of elephants, horses, Yazhis, lions and soldiers. The sculptures in this mandapam appear like late Vijayanagara or Nayaka style.
Tirvengadamudaiyan Temple:
Presiding Deity is called as Prasanna Venkatesa Perumal / Tirvengadamudaiyan. The Vimaanam of this temple is known as Padma Vimanam. The east facing sanctum enshrines the gigantic seven feet image of Tirvengadamudaiyan. He is found in the standing posture and has four arms holding conch and discus in his two upper arms. He resembles similar to Tirupati Balaji. The Utsava idols of Tirvengadamudaiyan called Venkatesa Perumal and his two consorts Sri Devi and Bhoo Devi are also found in the sanctum. There is no flag staff in this temple. Instead, a Deepa sthamba is found.
Garuda is found in Maha Mandapam area, facing towards the sanctum. Here the poojas are performed as per the regulations opted at the Tirupati temple. In the sanctum sanctorum there are five Perumals called ‘Pancha Perars’. The Lord wears on his chest a chain engraved with 108 Lakshmi figures. On the Saturdays of the Purattasi month, special pooja is performed by adorning the Lord with medicated camphor. At the front mandapam appears Lord Ranganatha. On the first day of the Purattasi Brahmotsavam, Sri Ramanuja and Chakkarathalwar go for the Flag-hoisting function. This is quite significant.
On the fifth day of the festival, the ceremony of the Lord garlanding Thaayar with the Lakshmi-engraved chain is conducted. At that time the doors of the sanctum are closed and the devotees cannot have the darshan of the Lord. This is done on the basis that the Lord should be worshipped along with Thaayar only. That night ‘Garuda Seva’ is performed. On the Panguni Uthiram day, the Lord appears along with Sridevi, Bhudevi, Alamelumangai Thaayar and Andal.
Alarmel Mangai Shrine:
Mother is called as Alarmel Mangai. Her beautiful and big image is enshrined in a separate shrine in the south-western corner of the prakara. Her bronze idol is found in the same shrine. She is donned with the garland worn by the Lord and is beautified. Generally, in the Vishnu temples the Lord alone appears in the Garuda Seva. But, in this temple, Thayar appears in Garuda Seva. During the Karthigai month, the Theertha Utsavam for nine days is performed for the Thayar. At that time, she alights on the Garuda carrier and goes around the prakaram. There is a separate female-Garuda carrier for this purpose.
Utsavar:
Utsavar is Venkatesa Perumal. There is an interesting legend behind the Utsavar. Laldas was worshipping the Lord after building the temple. Once the Lord appeared in his dream and indicated that he was lying as an image in the nearby garden. Laldas recovered the image and installed here. During the Purattasi Brahmotsavam, the Utsavar is taken to that place from where he was retrieved. At that time, he is called as the ‘Lord who goes to his birthplace’ – ‘Pirappitam Chellum Perumal’. Special poojas are performed there.
Special poojas are conducted to ‘Sayanaperar’ for three days during Vaikasi. When this pooja is performed, without anybody seeing it, the Lord is veiled with seven curtains. After all the poojas are completed the Lord is placed near the Utsava moorthy and worshipped by offering him seven types of fruits. During that time only, we can worship Him.
Ranganathar Shrine:
In Ardha Mandapam, there is a separate south facing shrine of Ranganathar. He is found in the reclining posture. Sri Devi and Bhoo Devi are found along with him. Brahma is found seated on lotus that emerges out of his navel.
Lakshmi Narasimhar Shrine:
Lord Lakshmi Narasimhar is in separate sanctum facing west. Under His feet is the ‘Narsimha Yantra’. Generally, in the temples the abishekam water will be given to the devotees in their hands. But in this sanctum, the water is sprinkled on the devotees. The belief is that the water will cure diseases.
Tirumangai Alvar Shrine:
There is a separate shrine for Tirumangai Alvar with his wife, Kumudavalli in the temple.
Mandapams and other Shrines:
There are three important mandapams found in this temple. The mandapam located in the south-western corner has three shrines namely Alarmel Mangai, Lord with Mother Sita and Lakshman and Varadarajar with his consorts Sri Devi and Bhoo Devi. There is another mandapam located in the north-western corner has three shrines namely Andal, small images of Nardana Krishna with his consorts Rukmini and Bhama and Varaha in the standing posture.
The third mandapam is located in the north-eastern corner of the temple. There are three shrines situated here. They are Manavala Mamuni, Lakshmi Narasimha and Puri Jagannath. In Puri Jagannath shrine, the small images of Jagannath, Baladeva and Subhadra are found, similar to Puri Temple. Narasimha Yantra is found in Lakshmi Narasimha shrine. All the sub-shrines enshrine the stone as well as the bronze images of the deities.
The mandapams are full of pillars with so many beautiful and interesting sculptures. Apart from these mandapams, the pillars with carvings are found all over the temple. Paramapatha Vasal (entrance) is located between the first two mandaps, which is painted beautifully in vibrant colors. Anjaneya is found in a separate shrine near the first mandapam.
Vahanas (Vehicles):
The Vahanas that carry the bronze images of the deities during the festivals and processions are very big and impressive. For example, the elephant vahana is almost in the size of an elephant calf. Garuda Seva is about Garuda carrying Vishnu during the procession. In this temple, unusually Alarmel Mangai is carried by Garuda during the procession. Interestingly, Garuda vahana which carries the Goddess is in the female form.
Vaishnavite Saints Shrines:
There are many sub-shrines in the Mukha Mandapam and in the prakara for Vaishnavite saints that include Alavandan, Pillai Lokacharya, Koorathalwan, Ramanuja, Mudaliyandan, Tiruvarangaththu Amudanar, Tirumangai Alwar, Kumudavalli, Madura Kavi Alwar, Nammalvar, Nathamuni, Bhutat Alwar, Periyalvar, Periya Nambikal, Senai Mudaliyar, Pei Alwar, Poigai Alwar, Thirupaan Alwar, Tirukkatchi Nambi, Araiyar, Tirukoshtiyur Nambi, Empaar Bhattar, Tirumalai Nadan, Nampillai, Periyachan, Nanjeeyar, Vadakku Thiruveedhi Pillai, Tirvai Mozhi and Manavala Mamuni. All the sub-shrines enshrine the stone images as well as the respective bronze images of the Vaishnavite saints. Not many Vishnu temples in Chennai enshrine such a large number of Vaishnava saints. This should also be considered as one of the highlights of this temple.
Mural Paintings:
There are many beautiful mural paintings found on the walls across the entire temple. The painting of Paramapadanathan with Sri Devi, Bhoo Devi and Neela Devi as well as the one that depicts Ram in Pattabhishekam ceremony are notable paintings.
North Indian Temple:
The holy temple tank, called as Varaha Pushkarani, is located on the north side of the temple. On the banks of this tank, a small North Indian type temple is found. It is constructed probably in the 20th century CE. The images of Shiva Linga, Hanuman, Sapta Matas, Kartikeya, Ganesha and Ambika are enshrined here. It is called as Hanuman temple and Shiva temple.
Temple Opening Time
The temple remains open from 7.00 a.m to 12.00 a.m. and 5.00 p.m. to 9.00 p.m.
Festivals
10 days Udayavar Utsavam in Chithirai, 10 days festival for Varadar in Vaikasi, Aadi Pooram, Brahmotsavam in Purattasi, Vaikunta Ekadasi, Thirukalyanam on Panguni Uthiram day, Sri Rama Navami and Theerthavari Utsavam in Karthikai are the festivals celebrated here.
Prayers
Couples pray for issues here. When the prayers materialize and when the couples are blessed with off springs, they perform Thirumanjanam for the Lord and tie cradle as offering.
Contact
Prasanna Venkatesa Perumal Koil,
Bairagi Madam, General Muthiah 6th Street,
Sowcarpet, Chennai – 600 001
Phone: +91 44 2538 2142 / 2539 2869
Connectivity
The temple is situated in the General Muthiah 6th street. By going to the Yanaikavuni Bus stop and by walking for about 5 minutes we can reach the temple. The Temple is located at about 300 meters from Elephant Gate Bus Stop, 1.5 Kms from Parrys Corner Bus Stop, 2 Kms from Chennai Beach Railway Station, 2 Kms from Basin Bridge Junction, 1.5 Kms from Mannady Metro Station, 2 Kms from Chennai Central Railway Station, 5 Kms from Egmore Railway Station, 12 Kms from Koyambedu Chennai Mofussil Bus Terminus and 20 Kms from Chennai Airport. The Temple is located very close to the Mannady Metro Station and Chennai Central Railway Station. You can proceed on foot to this Temple from the station. From other parts of the city, you can take a Cabs, Auto Rickshaw, Bus, Local Trains and Metro trains to reach the Temple
பைராகி மடம்
சென்னை சௌகார்பேட்டையில், ஜெனரல் முத்தையா முதலி தெருவில் உள்ள பைராகி மடம் திருவேங்கடமுடையான் வேங்கடேச பெருமாள் ஆலயத்துக்கு வந்தாலே, அமைதியும் ஆனந்தமும் கிடைத்துவிடும் என்கிறார்கள் பக்தர்கள்!
கோயிலும் குளமுமாக அழகுற அமைந்திருக்கிறது ஆலயம். திருப்பதி ஏழுமலையானை நினைவுபடுத்தும் ஸ்ரீவேங்கடேச பெருமாளே இங்கு மூலவர். அருகில் தனிச் சந்நிதியில் அலர்மேல்மங்கை தாயார். காஞ்சி க்ஷேத்திரப் பெருமாளை நினைவுபடுத்தும் ஸ்ரீவரதராஜ பெருமாள். ஸ்ரீதேவி- பூதேவியுடன் வேணுகோபாலனாக எழுந்தருளி இருக்கும் ஸ்ரீகண்ணபிரான். ஸ்ரீவராகப் பெருமாள், ஸ்ரீலட்சுமி நரசிம்மர், பூரி ஜகந்நாதர். மற்றும் ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் என்று தெய்வ சாந்நித்தியம் நிறைந்து விளங்குகிறது பைராகி ஆலயத்தில்!
'பைராகி' என்றால் சந்நியாசி என்று அர்த்தம். அந்தக் காலத்தில், லால்தாஸ் என்ற ஒரு சந்நியாசி, லாகூரில் இருந்து கி.பி.1,800-ஆம் ஆண்டில் சென்னைக்கு வந்தார். சுமார் 420 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்தக் கோயில் இருக்கும் பகுதியில் தங்கினார். அப்போது இந்த வேங்கடேச பெருமாள் ஆலயத்தில், ராமர் பிரதான தெய்வமாக இருந்தாராம்! தினமும் அதிகாலையில் எழுந்து, நீராடி ஆலயத்துக்கு வருவார் லால்தாஸ். அனைவரையும் காத்து ரட்சிக்கும் அந்தப் பரம்பொருளிடம் மனமுருக வேண்டுவார். கண் மூடித் தொழுவார். இவரின் அதீத பக்திக்கு இரங்கிய பெருமாள், இவர் மூலம் தன்னை வெளிப்படுத்த திருவுளம் கொண்டார்.
வட மாநிலங்களில் இருந்து இப்படி யாத்திரை வரும் பக்தர்கள் சென்னபுரி பட்டினத்தில் (சென்னை) தங்கி, நல்ல விதத்தில் தரிசித்துச் செல்ல ஒரு மடம் கட்டத் தீர்மானித்தார். பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்கவும், உணவு உண்ணவும் முறையான வசதிகளை ஏற்படுத்தினார். பிறகு இந்த இடத்தை விட்டுச் செல்ல மனமின்றி, இவரும் இங்கேயே தங்கி இறைப் பணியில் ஈடுபடலானார். இந்த நிலையில் ஒரு நாள் இரவு லால்தாஸ் கண்ணயர்ந்து தூங்கும் போது திருமலையில் அருள்பாலிக்கும் வேங்கடாசலபதி திருக்காட்சி அளித்தார். கனவில் தரிசனம் தந்த பெருமாளை கண் குளிரக் கண்ட லால்தாஸ், ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அந்த மாலவனிடம் மனமுருக வேண்டி நின்றார். பக்தனின் பரவசத்தையும் அதீத இறை நம்பிக்கையை யும் கண்டு புளகாங்கிதப்பட்ட வேங்கடா சலபதி, ''பக்தா. உன்னால் எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டி இருக்கிறது'' என்றார். லால்தாஸ் குளிர்ந்துபோனார்.
''முதலில் இந்த ஆலயத்தைச் செப்பனிட்டுத் தூய்மைப்படுத்து. நான் என்றென்றும் இங்கேயே தங்கி அருள் பாலிக்க எனக்கு ஒரு சந்நிதியை ஏற்படுத்து. அலர்மேல்மங்கை தாயாருக்கும் ஒரு சந்நிதியைக் கட்டு. உன்னால்தான் இதைச் செய்ய முடியும்!'' என்று சொல்லி ஆசீர்வதித்து மறைந்தார் இறைவன்!
இறைவன் தனக்கு இட்ட உத்தரவைச் சிரமேற்கொண்டு செய்யத் தீர்மானித்தார். ஆனால், அது அவ்வளவு சுலபமல்ல என்பதைப் பிற்பாடு உணர்ந்தார். அந்தப் பகுதியில் வசித்து வந்த பணக்காரர்களிடம் சென்று, கனவில் வேங்கடாசலபதி வந்து சொன்ன விஷயத்தைத் தெரிவித்துக் கோயில் கட்டு வதற்குப் பணம் கேட்டார் லால்தாஸ். பலரும் இவரை ஏளனம் செய்து திருப்பி அனுப்பினர். பிறகு, தனக்குத் தெரிந்த பஜனைப் பாடல்களைத் தெருவில் பாடி, அதன் மூலம் கிடைத்த சொற்பத் தொகையுடன் திருப்பணிகளை ஆரம்பித்தார். இதனால் ஒரு கட்டத்தில் பணிகள் தேக்கம் அடைந்தன. அந்த நேரத்தில் இறைவன் தனக்கு அருளிய சித்து வேலைகளைச் செயல்படுத்தத் தீர்மானித்தார். சாதாரண உலோகமான செம்பை தகதகக்கும் பொன்னாக மாற்றினார். அதை உரிய வியாபாரிகளிடம் விற்று, அதன் மூலம் கிடைத்த தொகையைக் கொண்டு ஆலயப் பணிகளை விரைந்து முடிக்க முற்பட்டார்.
'செம்பைப் பொன்னாக்கும் வித்தை தெரிந்தவர் லால்தாஸ்' என்ற தகவல் மெள்ளப் பரவியது. 'அடடே. இப்படி ஒரு சாகசம் தெரிந்த அற்புத மகானை நோகடித்து விட்டோமே!' என்று வருத்தப்பட்டு, கோயில் கட்டும் முயற்சிக்கு உதவினார்கள். திருப்பணிகள் விறுவிறுவென நடந்து முடிந்தது.
இந்த நிலையில் பெருமாள் இன்னோர் அற்புதத்தையும் நிகழ்த்தினார். ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு அருகே பொன்னப்பன் சந்து என்ற பகுதியில் நந்தவனம் ஒன்று இருந்தது. அங்கே பூமிக்கு அடியில் ஸ்ரீதேவி- பூதேவியுடன் தான் இருப்பதாக லால்தாஸின் கனவில் சொல்லி மறைந்தார் பெருமாள். நந்தவனத்தைப் பராமரித்து வந்த அன்பரிடம் தெரிவித்து, பெருமாள் விக்கிரகத்தைத் தேடிப் பார்க்கலாம் என்று கிளம்பிய லால்தாஸுக்கு மேலும் திகைப்பு. நந்தவனத்து அன்பரின் கனவிலும் முந்தைய நாள் இரவில் தோன்றிய பெருமாள், பூமிக்குள் தான் புதைந்து கிடக்கும் தகவலைச் சொன்னார். பிறகு இருவருமாகச் சேர்ந்து தேடி அந்த விக்கிரகங்களைக் கண்டுபிடித்தனர். ஸ்ரீதேவி- பூதேவி சமேதராகக் கிடைத்த அந்த அற்புதமான பஞ்சலோக விக்கிரகங்கள்தான் இன்றும் இந்தக் கோயிலில் பிரதான உற்ஸவ மூர்த்திகளாக அருள்பாலிக்கின்றனர்!
கிழக்கு நோக்கிய திருத்தலம். ராஜ கோபுரம் தாண்டியதும் பலிபீடம், கொடிமரம். அடுத்து, கருடன் சந்நிதி. இதை ஒட்டி மகா மண்டபம். இந்த மகா மண்டபம் ஒரு திருத்தேரின் முன்புறம் போல் அழகாக அமைந்துள்ளது. இந்தத் தேரை இரண்டு பக்கமும் இரு யானைகள் இழுத்துச் செல்வது போல் உள்ளது. உற்சவ காலங்களில் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் விக்கிரகங்கள் எழுந்தருள்வதற்காக இங்கே ஓர் அழகான அமைப்பு உள்ளது.
மூலவர் வேங்கடேச பெருமாளின் உயரம் சுமார் ஆறரை அடி. திருமலை திருப்பதியில் அமைந்துள்ள பெருமாளின் கோலத்தை நினைவுபடுத்தும் அதே அமைப்பு. பரந்து விரிந்த திருமார்பு. அதில் உறையும் சொர்ண லட்சுமி. சங்கு- சக்கரதாரி. பார்த்தாலே பரவசமாகி விடுவோம்! திருப்பதியில் நடப்பது போலவே அனைத்து உற்ஸவங்களும் இங்கு நடந்து வருகின்றன.
பன்னிரு ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் இங்கு சந்நிதி கொண்டுள்ளனர். இவற்றுள் குறிப்பிட வேண்டிய ஒன்று- திருமங்கை ஆழ்வார் தன் துணைவியார் குமுதவல்லியுடன் சந்நிதி கொண்டிருக்கிறார். தாயார் சந்நிதிக்கு அருகே பெரியநம்பி, திருமலை நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, திருமாலையாண்டான், திருக்கச்சி நம்பி ஆகியோருக்கு சந்நிதிகள் அமைந்திருப்பது சிறப்பு. இவர்களுக்கு விசேஷ திருமஞ்சனம் சார்த்தி சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.
பிராகாரத்தில் பிரதானமாக அமைந்துள்ளது அலர் மேல்மங்கை தாயார் சந்நிதி. முன்பக்கம் உற்ஸவர் மண்டபம். திருமலையின் அடிவாரத்தில் உள்ள திருச்சானூரில் நடக்கும் உற்சவங்கள் இங்கே தாயாருக்கும் நடந்து வருகின்றன. அவற்றுள், கார்த்திகை மாதத்தில் நடைபெறும் பஞ்சமி தீர்த்த உற்சவம் விசேஷம்.
உற்சவ காலத்தில் தாயாருக்கான கருட வாகனம் பெண் சொரூபமாக இருப்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு விசேஷம். சாதாரணமாக கருட வாகனம் என்றால், பிற கோயில்களில் மீசை முறுக்கிய கோலம், திரண்ட தோள்கள் போன்றவற்றுடன் கூடிய வாகனம் இங்கு தாயாருக்கு இல்லை. காதணி, மூக்கணி, புடவை அணிந்த கோலத்தில் பெண் கருட வாகனத்தில் புறப்பாடு நடக்கும். தாயாருக்கான அனுமந்த உற்ஸவத்தின்போதும் பெண் குரங்கு வாகனத்தில்தான் புறப்பாடு நடக்கும்.
மேலும் ஸ்ரீதேவி- பூதேவி சமேத வரதராஜ பெருமாள், ஆஞ்சநேயர், லட்சுமணன்- சீதை- கோதண்டராமர், ஸ்ரீதேவி- பூதேவி சமேத ஸ்ரீவேணுகோபாலன் (கண்ணன்), ஆண்டாள், வராக பெருமாள், ரங்கநாதர், லட்சுமி நரசிம்மர், பூரி ஜகந்நாதர் என நிறைய சந்நிதிகள். முக்கியமாக. ஸ்ரீலட்சுமி நரசிம்மர் சந்நிதி. கண்கள் சிவக்க உக்கிரத்துடன் காட்சி தருகிறார்.
இவரின் திருமஞ்சன தீர்த்தம் விசேஷம். இந்தத் தீர்த்தத்தை முகத்தில் தெளித்தால் தீராத நோயும் தீரும். மன பயம் விலகி தெளிவு பிறக்கும்!
சிவனாருக்கும் ஆஞ்சநேயருக்கும் கூட சந்நிதிகள் அமைந்துள்ளன.
Comments
Post a Comment