Temple info -155 Vettuvankoil, Kazhugumalai வெட்டுவன் கோயில், கழுகுமலை
Temple info -155
கோயில் தகவல் -155
Vettuvan Koil in Kalugumalai, a panchayat town in Thoothukudi district in the South Indian state of Tamil Nadu, is dedicated to the Buddha . Constructed in the Pandyan Architecture and rock cut architecture, the unfinished temple is believed to have been built during the 8th century by Pandyas. The rock-cut architecture exemplary of early Pandyan Art. The other portions of Kalugumalai houses the 8th century Kalugumalai Jain Beds and Kalugasalamoorthy Temple, a Murugan temple.
Vettuvan Koil
Religion
Affiliation
Hinduism
District
Thoothukudi
Deity
Vettuvan Koil(Shiva)
Location
Kalugumalai
State
Tamil Nadu
Country
India
Location in Tamil Nadu
Geographic coordinates
9°09′12″N 77°42′12″E
Architecture
Type
Dravidian architecture, Rock cut
Website
kalugumalaitemple.tnhrce.in
As per local legend, a rivalry between a father and son resulted in son finishing the sculpture first at the lower hills, while the father was slow to respond. In his angst, the father killed the son and thus the shrine remains unfinished.
The temple is maintained and administered by Department of Archaeology of the Government of Tamil Nadu as a protected monument.
Legend
As per local legend, there was a rivalry between a father and son sculptors on who would attain the best specimen. The son started to work on the lower rock for the Murugan shrine, while the father started working uphill. The son claimed that the father would never finish the shrine, which infuriated the father to kill the son. It is believed that the son was able to finish the Murugan temple at the foothills, but the father's work on this temple was incomplete. Another variant of the legend states that the father wanted his son to take time to learn the tricks to start his work. Foregoing the orders of the father, the son started chiselling in the inner chamber. Hearing the sound and raged by the disobedience, the father killed the son. There two literal Tamil meanings to Vettuvan Koil, one of which means "Heaven of sculptors", while the other means the temple of slayer.
History
Sculpture in the temple
The temple is believed to have been built during 8th century around 800 AD.[3] The hill was under the control of Ettaiyapuram Zamindar until 1954. The Raja gifted the village to the Kalugasalamoorthy Temple and formed five streets around the temple to enable the temple car to pass easily. He also allocated a middle street for the temple priests. During the Panguni Uthiram festival procession, the elongated conflict between two castes in the region, namely, Nadars and Maravars resulted in a riots, popularly called Kalugumalai riots of 1895. A total of ten people were killed, many injured and the temple car and other property in the region were destroyed. The sculptures in Vettuvan Koil and the Kalugumalai Jain Beds were not affected during the riots.
Architecture
Kalugasalamoorthy Temple and Kalugumalai Jain Beds, both located in Kalugumalai, in the same hill
The temple is located in Kalugumalai, a rockyhill in Thoothukudi district in southern Tamil Nadu. The temple is carved out from a single rock in a rectangular portion measuring 7.5 m (25 ft) in depth. The carvings in the temple show the top portion of the temple, with an unfinished bottom. The sculptures and the carvings are indicative of Pandyan art during the period. The granite rock looks like a blooming lotus, with hills surrounding it on three sides. The vimana (ceiling over the sanctum) has niches of Parsavadevatas, the attendant deities of Shiva, like ganas, Dakshinamurthy depicted playing a mridanga, Siva with his consort Uma, dancers, various niches of Nandi (the sacred bull of Shiva) and animals like monkeys and lions. Historian Sivaramamurti believes that this is the only place where Dakshinamurthy is depicted playing the Mridanga (a percussion instrument), while in all other places, he is depicted playing Veena. Epigrapher like V. Vedachalam believes that there is a spontaneity in the sculptures indicating of natural human movements like in the Shiva and Uma sculpture where they seem to be talking like common folks.[2] The other portions of Kalugumalai houses the 8th century Jaina Abode and Kalugasalamoorthy Temple, an unfinished Shiva temple.
Historians have equated the temple with similar temples across India based on the monolithic classification. Historian K.V. Soundara Rajan believes that the temple is similar in architecture to that of Virupaksha Temple at Karnataka by Vikramaditya II during 734–44, Kanchi Kailasanathar Temple built by Narasimhavarman II during 685–705 AD and Kailasa temple, Ellora by Krishna I during 756–77. Some historians believe that the similarities in the architecture are indicative of the political relations between the Pallavas, Rashtrakutas and Chalukyas, which is highly debatable.
Culture
Vettuvan Koil is maintained and administered by Department of Archaeology of the Government of Tamil Nadu as a protected monument. Kalugumalai was chosen in the plan to be included as a rural tourism site in Incredible India campaign by the Tourism Ministry of the Government of India. As a part of the campaign the ministry allocated ₹10 million to develop the infrastructure around the region in 2008. The tourist inflow to the town increased to 3,000 persons per month during 2009 from 400 per month during the previous years.
பூமிக்கு அடியில் பாறையை குடைந்து உருவாக்கப்பட்ட அதிசய கோவில் பற்றி தெரியுமா?
vettuvan-kovill
இந்தியாவில் பல விசித்திரமான கோவில்களை நாம் பார்த்ததுண்டு. அந்த வகையில் கிட்டதட்ட 1200 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட ஒரு அதிசய குகை கோவிலை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
vettuvan kovi
தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை பேரூராட்சியில் அமைந்துள்ளது வெட்டுவான் கோவில். ஊரின் மையப் பகுதியிலிருந்து கிட்ட தட்ட 1 கி.மீ. தொலைவில் அந்த ஊரின் பெயரை கொண்ட மலையில் அமைந்துள்ளது இந்த கோவில்.
கி.பி. 800 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த கோவில் ஒரே பாறையால் செதுக்கப்பட்டுள்ளது. கழுகுமலையில் ஏறி நடந்து செல்லும்போது இக்கோயில் கண்ணுக்குத் தெரியாது. காரணம் இது சற்று தாழ்ந்த தளத்தில் சுமார் 10 அடி இறக்கத்தில் அமைந்துள்ளது.
kazhukumalai vettuvan kovil
ஒரு மிக பெரிய பாறையை கிட்டதட்ட 7.5 மீட்டர் ஆழத்திற்கு சதுரமாக வெட்டிஎடுத்து அதன் நடுப்புறத்தை அக்காலத்திலேயே கோயிலாக செதுக்கியுள்ளனர். சிற்ப வேலைபாடுகள் நிறைந்த இந்த கோவிலின் பனி ஏனோ முழுமையாக நிறைவடையவில்லை. சிகரம் மட்டுமே முற்றுப்பெற்றுள்ள நிலையில் கருவறையில் பிள்ளையார் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
கோவில் விமானத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு நந்தி சிலைகள் உள்ளன. அதோடு இந்த கோவிலில் உமாமகேசுவரர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா ஆகியோரின் சிற்ப வடிவங்களும் உள்ளன. இந்த கோவில் எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோவிலை போன்று உள்ளது. கைலாசநாதர் கோவிலும் ஒரே பாறையை கொண்டு செதுக்கப்பட்ட ஒரு பிரமாண்டமான கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கழுகுமலை வெட்டுவான் கோவில் உருவானதற்கு ஒரு புராணக் கதை செவிவழியாக கூறப்படுகிறது. பாண்டிய நாட்டில் வாழ்ந்து வந்த ஒரு சிற்பியின் கதை தான் இது. ஒரு கல்லினை சிலையாக மாற்றி அதற்கு உயிர் கொடுக்கும் வித்தையை கற்றவர் இந்த சிற்பி. சிற்பியும், சிற்பியின் மகனும் ஒரு நாள் கோவில் திருவிழாவிற்கு சென்றிருந்தனர். அந்தத் திருவிழாவில் தன் மகனை சிற்பி தொலைத்து விட்டார். பல இடங்களில் தேடியும் தன் மகன் கிடைக்கவில்லை. நாட்கள் கடந்து விட்டன. மகனை இழந்த சிற்பி, ‘அரைமலை’ என்று அழைக்கப்படும் இந்த கழுகுமலைக்கு வந்து தன் சிற்ப வேலையை தொடங்கினார். சமணத் துறவிகளுக்கு தேவைப்பட்ட சிலைகளை செய்து கொண்டு தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு வந்தார்.
அருகிலுள்ள இடத்தில் மலையில் ஒரு சிறுவன் அழகாக சிலைகளை வடித்துக் கொண்டிருப்பதை கண்ட மக்கள், சமணர் சிலைகளை செய்து கொண்டிருந்த சிற்பியிடம் வந்து ‘அங்கு சிறுவன் ஒருவன் ஒரே கல்லில் சிலைகளை வடித்துக் கொண்டிருப்பதை பார், எவ்வளவு அழகாக இருக்கிறது தெரியுமா.’ என்று பலர் அந்த சிறுவனைப் பாராட்டி இந்த சிற்பியிடம் கூறிக்கொண்டே இருந்தனர்.
இப்படி அந்த சிறுவனுக்கு பாராட்டுக்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. இதனால் கோபமடைந்த சிற்பி, அந்தச் சிறுவனை காணச் சென்றார். சிறுவன் சிலையை செதுக்கி கொண்டிருப்பதை பின்புறமாக நின்று பார்த்த சிற்பி, கையில் வைத்திருந்த உளியால் சிறுவனை தாக்கினார். உடனே அந்த சிறுவன் வலி தாங்க முடியாமல் ‘அப்பா’ என்று கத்தியபடி கீழே விழுந்தான். அந்த குரலை கேட்டதும் சிற்பி ஓடி வந்து சிறுவனை தாங்கி பிடித்தான். அந்த சிறுவனின் முகத்தை பார்த்த சிற்பி அதிர்ச்சியில் உறைந்து போனார். திருவிழாவில் காணாமல் போன தன் மகன் தான் அவன் என்பதை உணர்ந்தார்.
பிறகு தன் மகன் ஒரே கல்லில் செதுக்கிய சிற்பத்தை கண்டு திகைத்துப் போனார். தன் கையால் காயப்படுத்திய மகனே தூக்கி, தனது மடியில் போட்டுக்கொண்டு புலம்பினார். தன் மகன் என்று தெரியாமலேயே இந்த சிறுவனை காயப்படுத்திய சிற்பி, தன் மகன் இறந்ததற்கு தான்தான் காரணம் என்று அழுது புலம்பினார்.
அந்த சிறுவன் இறந்து விட்டதால் தான் இந்த கோவில் பணிகள் பாதியிலேயே நின்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த கோவிலுக்கு ‘வெட்டுவான் கோவில்’ என்ற பெயர் இதனால் தான் வந்ததாக அந்த ஊர் மக்கள் கூறுகிறார்கள். இந்தக் கதைக்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்த கோவிலின் பணிகள் பாதியிலேயே நின்றிருந்தாலும், தந்தை-மகன் பாசத்தை தாங்கி இன்றும் இந்தக் கோயில் உயிரோடுதான் இருக்கின்றது.
Comments
Post a Comment