Temple info -154 Valeeswarar temple, Nagalapuram. வாலீஸ்வரர் கோயில்,நாகலாபுரம்
Temple info -154
கோயில் தகவல் -154
Valeesvarar Temple is a Hindu temple dedicated to the deity Shiva, located at Ramagiri, also known as Ramagiri, in Chittoor district in Andhra Pradesh (India).
Vaippu Sthalam
It is one of the shrines of the Vaippu Sthalams sung by Tamil Saivite Nayanar Sundarar. This place is also known as Thirukkarikkarai, as it is on the banks of Cauvery.
Presiding deity
The presiding deity in the garbhagriha, represented by the lingam, is known as Valeesvarar. The Goddess is known as Maragadhambal.
Specialities
As per the order of Rama, Anjaneya brought the Linga from North India in order to consecrate it at Sethu. Bairava made a plan to possess the Linga. As per the plan Anjanaye was made to feel thirsty. As the Linga should not be kept in floor, he gave it to Bairava who came as a boy. Before his return Bairava put it on the floor. Anjaneya tried to take it from the place but in vain. There itself Linga was consecrated. As Anjaneya tried to pull the Linga by his tail, the presiding deity was known as Valisvarar. The hill which was thrown by Anjaneya fell on a water body known as Kalingamadu. Later it took the form of a mountain. As the Linga was bought for doing puja by Rama it was known as Ram and as the water body became a mountain it was known as 'Giri' (hill). So this place was known as Ramagiri. This temple is also known as Bairava temple. From the mouth of Nandi water is coming at all times. The temple tank was filled and later became a river known as Kariyaru. Generally in Shiva temples in front of presiding deity, Nandhi could be found. But in this temple instead of Nandi, Anjaneya is found. No Pradosha festival held in this temple.
Structure
The temple is without gopura. After going through the entrance in the left nandhi tirtta is found. On its bank the shrine of Vinayaka and the shrine of the Goddess are found. In the kosta, Dakshinamurthy, Brahma and Durga are found. Kali, Vishnu, Subramania, Virabhadra in sitting posture and Surya are also found in this temple. The presiding deity is found in a slanting posture. This temple belonged to Pallava period. Later Vijayanagara kings renovated the structure. When Sangamakula Virupatcharayan made attempt to built the gopura, Purushotthama Gajapathy came on war with him. So the work was halted. According to the inscription 'Jayamkonda Cholamandalatthu Kundravartthana Kottatthu Nattu Naduvin Malai Thirukkari Karai Pillayar'.after the war with Chalukya, Veera Rajanedra Chola on his return made donations.
Location
The temple is located next to Nagalapuram in Chittoor district in Andhra Pradesh.[2] In Chennai-Uthukottai-Surattappalli-Nagalapuram route this temple can be reached. This temple is opened for worship from 8.00 a.m. to 11.00 a.m. and 3.00 p.m. to 6.00 p.m.
திருக்காரிக்கரை (ராமகிரி) Thirukkarikkarai (Ramagiri)
இறைவர் திருப்பெயர்:
வாலீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்:
மரகதாம்பாள்.
தீர்த்தம் :
நந்தி தீர்த்தம்.
வழிபட்டோர்:
அநுமன்.
தல வரலாறு
(காவேரி) காரியாற்றின் கரையிலுள்ள ஊர். எனவே 'காரிக்கரை' என்றாயிற்று.
தற்போது மக்கள் "ராமகிரி" என்று அழைக்கின்றனர். அழகிய பசுமை நிறைந்த சிற்றூர்.
வைப்புத்தலப் பாடல்கள் : சுந்தரர் - கடங்களூர்
திருக்காரிக் (7-31-3).
இராம பிரானின் கட்டளைப்படி சேதுவில் பிரதிஷ்டை செய்ய ஆஞ்சநேயர் வடக்கிருந்து சிவலிங்கத்தை கொண்டு வரும்போது, அதைத் தன்னிடத்தில் இருத்திக் கொள்ள பைரவர் எண்ணி அதற்கோர் வழியை மேற்கொண்டார். அதன்படி ஆஞ்சநேயருக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது. சிவலிங்கத்தைத் தரையில் வைக்கக் கூடாதென்று எண்ணி, சிறுவனாக அங்கு வந்த பைரவரிடம் தந்துவிட்டு நீர்ப் பருகச் சென்றார். அவர் குளத்தில் இறங்கி நீர் பருகி வருவதற்குள், பளுவாக உள்ளதென்று சொல்லிச் சிறுவன் பூமியில் வைத்துவிட்டான். கோபமுற்ற ஆஞ்சநேயர் அச்சிவலிங்கத்தைத் தன் வாலால் சுற்றிப் பலமாக இழுத்தார் - பயனில்லை. சிவலிங்கம் சற்று சாய்ந்ததே தவிர அதைப் பெயர்த் தெடுக்கமுடியவில்லை. ஆதலின் பொருமான் இங்கேயே பிரதிஷ்டையானார். வாலால் சுற்றியிழுக்கப்பட்டமையால் சுவாமி - வாலீஸ்வரர் என்னும் பெயர் பெற்றார். ஆஞ்சநேயர் கோபத்தில் வீசிய மலையே இதற்கு முன்பு இங்கிருந்த 'காளிங்கமடு' என்னும் நீர் நிலையில் விழுந்து, அதனால் நீர் நிலையழிந்து மலையேற்பட்டது.
இராமரின் பூசைக்காக எடுத்து வரப்பட்ட சிவலிங்கம் பிரதிஷ்டையானதால் "ராம்" என்பதும்; நீர் நிலை மறைந்து மலை ஏற்பட்டதால் "கிரி" என்பதும் சேர்ந்து இப்பகுதி பிற்காலத்தில் "ராமகிரி" என்று வழங்கலாயிற்று.
சிறப்புக்கள்
இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் இத்தலத்தை வழிபட்டுச் சென்றதாகப் பெரியபுராணம் கூறுகிறது. ஆனால் அவர்கள் பாடிய பதிகங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
பழமையான பெரிய சிவாலயம். இத்தலம் கால பைரவத் தலம் என்றுப் போற்றப்படுகிறது.
இங்குள்ள நந்தியின் வாயிலிருந்து இடையறாது நீர் கொட்டிக் கொண்டேயுள்ளது. இந்நீர் (தீர்த்தக்) குளத்தில் நிரம்பி 'காரியாறு' என்றும் பெயருடன் ஓடுகிறது.
இங்கு கால பைரவர் புத்திரபாக்யம் தரும் பெருமை வாய்ந்தவராகத் திகழ்கிறார்.
மூலவர் - வாலீஸ்வரர்; சுயம்பு மூர்த்தி; சற்று சாய்ந்த நிலையில் உள்ளார். வாலால் சுற்றியிழுத்த தழும்புகள் திருமேனியில் உள்ளன.
பல்லவர் காலக் கோயில் - சிதிலமாகியதால் பிற்காலச் சோழர்களும் விஜய நகர மன்னர்களும் சீர்ப்படுத்தியுள்ளனர்.
சங்கமகுல விரூபாட்சராயன் இதற்குக் கோபுரம் கட்ட முயன்றபோது, புருஷோத்தம கஜபதி என்பவனின் திடீர் படையெடுப்பால் அப்பணி நின்று கோயிற்று.
வீர ராசேந்திர சோழன் என்பவன் சாளுக்கியருடன் போரிட்டு, வென்று, திரும்பும் வழியில் இக்கோயிலுக்கு நன்கொடைகள் வழங்கியதாகக் கல்வெட்டொன்றால் அறிகிறோம்.
'சயங்கொண்ட சோழமண்டலத்துக் குன்றவர்த்தனக் கோட்டத்து நின்றையூர் நாட்டு நடுவின் மலை திருக்காரிக்கரைப் பிள்ளையார்' என்று கல்வெட்டால் தெரியவருகிறது.
அமைவிடம் மாநிலம் : ஆந்திரா ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் நாகலாபுரத்திற்கு அடுத்து உள்ளது.
நன்றி -நெய்வேலி முரளி
Comments
Post a Comment