Temple info -46 Hasanamba temple, Hassan ஹஸனாம்பாள் கோயில்

 Temple info - 46

கோயில் தகவல் -46





Miracles very many at Hasanamba Temple

Every year people look forward to the months of October/November when the most celebrated festival of Deepavali sets in. 

This is also a time when a unique temple with a host of miracles and legends surrounding it steals the limelight. Situated at about 180 km from Bengaluru, this shrine sits prettily in Hassan. Dedicated to Goddess Shakti, this eponymous shrine is believed to have been built during the 12th century.

Once a year only

To be exact, the temple is opened on the first Thursday after the full moon in the month of Ashwayuja as per Hindu calendar, and kept open for about a week until the day of Bali Padyami, coinciding with the festival of Deepavali. And to have the darshan of the goddess during this time, an unbelievably large number of devotees descend here, encompassing the whole town with festive fervour.

So, what is it that makes this temple so unique and important? According to mythology, long ago, there was a demon, Andhakasura, who after a rigorous penance, obtains a boon from Brahma to become invincible. With the newly acquired power, he creates havoc everywhere. Even when Shiva tries to kill him, every drop of his blood that falls to the ground grows into a demon and becomes uncontrollable.

Shiva by his powers creates Yogeshwari, a goddess who, along with Sapthamathrikas — namely Brahmi, Maheshwari, Kaumari, Vaishnavi, Varahi, Indrani and Chamundi — brings about the end of the demon.

Thereafter, the Sapthamathrikas travelling south from Varanasi stumble upon a jungle with pristine beauty and decide to stay there. This beautiful location is what turned out to be the present-day Hassan. Among the goddesses, Vaishnavi, Maheshwari and Kaumari resided in the anthill in the sanctum. Goddesses Chamundi, Varahi and Indrani chose to dwell in Devigere Tank near the temple, while Goddess Brahmi resided in Kenchammana Hoskote on the outskirts.

The temple of Hasanamba with three goddesses is the one where everyone makes a beeline to in order to have a darshan during this time. Goddess Hasanamba is revered for the miracles and legends associated with her. The practice of opening the doors of the temple for a few days during Deepavali is being followed for years now.

After the day of Bali Padyami, the temple will be closed.

Before closing the temple shrine, a ghee lamp is lit and placed in the sanctum along with flowers and a prasad of cooked rice. When the temple is opened after a year, it is indeed miraculous to see that the lamp still burning, the flowers fresh, and the prasad unspoilt.

According to another legend, there was a lady who was an ardent devotee. She visited the temple every day. But her cruel mother-in-law followed her one day and on seeing her pray, assaulted her with a hard object. When the daughter-in-law cried for help, Hasanamba turned her into a stone so that she could be unharmed. Even now there is a stone inside the temple, said to represent the lady. It is believed to be moving towards the goddess by a fraction of a millimetre every year, and when it reaches the anthill, the present Kali Yuga will come to an end.

Yet another folklore says once, four robbers tried to steal the ornaments in the temple. They were frozen into stones. These stones are very much there for us to see in the adjacent shrine of Kallappana Gudi.


ஹசனாம்பாள் கோயில்,ஹாசன்

ஆண்டின் 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் அதிசய கோயில்!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் நகரம் 'ஏழைகளின் ஊட்டி' என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. இந்த நகரத்தில் அமைந்திருக்கும் ஹாசனாம்பா கோயிலின் காரணமாகவே இந்நகரத்துக்கு ஹாசன் என்று பெயர் வந்தது.

இக்கோயில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்காக திறந்துவிடப்படுகிறது.

எனினும் கோயில் 16-ஆம் தேதியே திறக்கப்பட்டாலும் 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் சடங்குகள் நடைபெறுவதால் அந்த நாட்களில் பொதுமக்களுக்கு கோயிலில் நுழைய அனுமதி இல்லை.

வினோத நம்பிக்கைகள்!

மாமியார்-மருமகள் கல்! : 

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஹாசனாம்பா கோயிலுக்கு நாள் தவறாமல் வந்து வழிபட்டு கொண்டிருந்திருக்கிறாள் ஒரு பெண். ஒருநாள் அவளை தொடர்ந்து வந்த அவளின் மாமியார் ''வீட்டில் வேலை செய்யாமல் இங்கென்ன செய்கிறாய்'' என்று சொல்லி அப்பெண்ணை அடித்திருக்கிறாள். அப்போது அப்பெண் வலியால் சத்தமிடவே அம்மன் அவள் முன்பு பிரசன்னமாகி அவளை கல்லாக மாற்றிவிட்டாள் என்று சொல்லப்படுகிறது. அந்த கல்தான் தற்போது மாமியார்-மருமகள் கல் என்ற பெயரில் கோயிலில் காணப்படுகிறது. இந்த கல் ஆண்டுதோறும் அரிசி அளவு அம்மன் விக்ரகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதாம். அதோடு இது நகர்ந்து நகர்ந்து அம்மன் விக்ரகத்தை அடைந்துவிட்டால் இந்த கலியுகம் அழிந்துவிடும் என்று நம்பப்படுகிறது.

திருடர்கள் கோயில் : ஹாசனாம்பா கோயிலில் ஒருமுறை அம்மன் ஆபரணங்களை திருடிச்செல்ல நான்கு திருடர்கள் வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அம்மன் அவர்களை கல்லாக போகுமாறு சபித்ததாக சொல்லப்படுகிறது. அந்த நால்வரின் கற்சிலைகள் தனிக்கோயிலாக 'திருடர்கள் கோயில்' என்ற பெயரில் ஹாசனாம்பா கோயில் வளாகத்தினுள்ளேயே அமைந்திருகிறது.

அணையா தீபம் : ஹாசனாம்பா கோயில் ஒவ்வொரு ஆண்டும் மூடப்படும் நாளான பலி பட்யாமி என்ற தினத்தில் (இந்த ஆண்டு - அக்டோபர் 5) கோயிலில் தீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபமானது அடுத்த ஆண்டு அஸ்வினி பூர்ணிமாவை தொடர்ந்து வரும் வியாக்கிழமை கோயில் திறக்கப்படும் நாள் வரை அணையாமல் எரிந்துகொண்டிருக்குமாம்.

கோயிலுக்குள் குழந்தை மாட்டிக்கொண்டால்?! : கோயில் மூடப்படும் நாளில் தவறுதலாக குழந்தை ஏதும் உள்ளே மாட்டிக்கொண்டால் மீண்டும் கோயில் திறக்கப்படும் நாள் வரை அந்த குழந்தை உயிருக்கு ஆபத்தில்லாமல் நலமுடன் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

வாடா மலர்கள் : ஹாசனாம்பா கோயில் மூடப்படும் இறுதி நாளில் அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்படும் பூக்கள், மாலையிடப்படும் பூக்கள் எல்லாம் அடுத்த ஆண்டு வரை வாடாமல் இருக்குமென்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த அதிசயத்தை பார்ப்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் கோயில் திறக்கப்படும் நாளில் கோயிலுக்கு வருகிறார்கள்.

வரலாறும், புராணமும்!

ஹாசனாம்பா கோயில் 12-ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டப்பட்டது. இந்த கோயில் பாம்பு புத்து வடிவத்தில் கட்டப்பட்டிருப்பதொடு, கர்நாடக கட்டிடக்கலையின் சிறந்த உதாரணமாகவும் திகழ்கிறது.

இது கட்டப்பட்ட பிறகே ஹாசன் நகரம் அப்பெயரை பெற்றதாக சொல்லப்படுகிறது. அதாவது அதற்கு முன்பு சிம்ஹாசனபுரி என்று அழைக்கப்பட்டு வந்த ஹாசன் நகரம் ஹாசனாம்பாவின் (சப்த கன்னியர்கள்) வருகைக்கு பிறகு ஹாசன் என்று அழைக்கப்படலாயிற்று.

புராணக் கூற்றின் படி சப்த (ஏழு) கன்னியர்களான பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி ஆகியோர் காசியிலிருந்து ஹாசன் நகரத்துக்கு வந்துள்ளனர்.

அதன் பின்னர் 3 கன்னியர் புத்து வடிவிலும், கெஞ்சம்மா என்ற பெயரில் கோட்டையாக ஒருவரும், தேவகரே என்ற குளத்தினடியில் மூன்று கிணறுகளாக 3 கன்னியர்களும் கோயில் மற்றும் அதைச் சுற்றிலும் தங்கி ஹாசன் நகர மக்களுக்கு அருள் பாலித்து வருவதாக நம்பப்படுகிறது.

ஹாசனாம்பா கோயில் திறப்பு!

ஹாசனாம்பா கோயில் ஒவ்வொரு ஆண்டும் தளவார் குடும்பத்தினர் கோயில் நுழைவாயிலில் கட்டப்பட்டிருக்கும் வாழை மரத்தை வெட்டிய பிறகு திறந்துவிடப்படுகிறது.

ஆண்டின் 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் அதிசய கோயில்!

அதோடு ஹாசன் மாவட்ட கருவூலத்திலிருந்து எடுத்துவரப்படும் ஆபரணங்கள் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படும். அதன்பிறகு அம்மன் நகைகள் 10 நாட்களின் முடிவில் மீண்டும் கருவூலத்துக்கே எடுத்துச்செல்லப்படுகின்றன.

Comments

Popular posts from this blog

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்

5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்