Sri Raghavendra Mutt, Mantralayam ராகவேந்திரர் மடம்,மந்த்ராலயம்
Templesseenbyme
75. Sri Raghavendra Swamy Mutt, Mantralayam
I dont know how i missed Mantralayam in this series. Been there few times. Serene,peaceful bliss.
Shri Raghavendra Math, better known as Rayara Math (popularly known as Shri Raghavendra Swamy Mutt, formerly known as Shri Kumbakonam Math) is one of the three premier Dvaita Vedanta monasteries (matha) descended through Vibudhendra Tirtha (a disciple of Ramchandra Tirtha of Uttaradi Math) and their disciples based in Mantralayam. Raghavendra Matha is located on the bank of Tungabhadra River in Mantralayam in Adoni taluk of Kurnool district in Andhra Pradesh, India.
Raghavendra Math, along with Uttaradi Math and Vyasaraja Math are considered to be the three premier apostolic institutions of Dvaita Vedanta and are jointly referred as Mathatraya . It is the pontiffs and pandits of the Mathatraya that have been the principle architects of post-Madhva Dvaita Vedanta through the centuries.
History
Raghavendra Matha is one of the matha which branched off from the main lineage of Madhva to spread the tattvavada in the southern part of India. It was named Kumbakonam Matha and later it was changed as Sri Vijayendra Mutt after Vijayendra Tirtha or Vijayendra Swamigal by Sudhindra Tirtha, a disciple and successor to the pontificate of Kumbakonam Matha after Vijayindra Tirtha. After Sudhindra Tirtha his disciple, the most venerated dvaita saint Raghavendra Tirtha continued in the pontifical lineage as the pontiff of the matha. After small stay at Kumbakonam, he seems to have gone on a pilgrimage tour visiting Rameshwaram, Ramnad, Srirangam, and Mathura then he moved westwards to Udupi and Subramanya, and thence to Pandharpur, Kolhapur and Bijapur. At Kolhapur, he is said to have made long stay and at Bijapur, he made many converts. After that he returned Ultimately to Kumbakonam. By 1663 he left to Mysore where he got grant from Dodda Devaraya Odeyar. Later he moved to further north and finally settled down at Mantralayam, a village on bank of river Tungabhadra in Adoni taluk in Andhra Pradesh. There on the sacred river he took Samadhi in 1671.
The matha was later named after Raghavendra Tirtha as Raghavendra Matha.
Guru Parampara Edit
Madhvacharya
Padmanabha Tirtha
Narahari Tirtha
Madhava Tirtha
Akshobhya Tirtha
Jayatirtha
Vidyadhiraja Tirtha
Kavindra Thirtha
Vaageesha Thirtha
Ramachandra Tirtha
Vibudhendra Tirtha
Jitamitra Tirtha
Raghunandana Tirtha
Surendra Tirtha
Vijayeendra Tirtha
Sudhindra Tirtha
Raghavendra Tirtha
Yogeendra Tirtha
Sooreendra Tirtha
Sumateendra Tirtha
Upendra Tirtha
Vadeendra Tirtha
Vasudhendra Tirtha
Varadendra Tirtha
Dheerendra Tirtha
Bhuvanendra Tirtha
Subodhendra Tirtha
Sujanendra Tirtha
Sujnanendra Tirtha
Sudharmendra Tirtha
Sugunendra Tirtha
Suprajnendra Tirtha
Sukrutheendra Tirtha
Susheelendra Tirtha
Suvrateendra Tirtha
Suyameendra Tirtha
Sujayeendra Tirtha
Sushameendra Tirtha
Suyateendra Tirtha
Subudhendra Tirtha – Present Pontiff
On Thursdays
there is heavy crowd of devotees in Mantralayam and unless booked in advance it is difficult to get accomadation. Gents will have to enter the samadhi bare bodied ie.wearing only veshti/Dhothi.
there is heavy crowd of devotees in Mantralayam and unless booked in advance it is difficult to get accomadation. Gents will have to enter the samadhi bare bodied ie.wearing only veshti/Dhothi.
இராகவேந்திர சுவாமிகள் மடம்
ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் (1595-1671), 16ஆம் நூற்றான்டில் வாழ்ந்த இந்து மத மகான் ஆவார். இவர் வைணவ நெறியையும் மத்வர் நிலைநாட்டிய துவைத மதத்தையும் போதித்தவர் ஆவார். இவர் விஷ்ணு பக்தரான பிரஹலாதரின் அவதாரமாக கருதப்படுகிறார். இவர் தனது ஆயுள் காலத்தில் பற்பல அற்புதங்களை நிகழ்த்தியதாகவும், இன்றும் தனது பக்தர்களுக்கு ஆசியும் அருளும் புரிந்து கொண்டிருக்கின்றார் என்றும் அவரைப் பின்பற்றுவோர் நம்புகின்றனர். ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள மந்திராலயம் என்ற இடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் இவர் உயிருடன் சமாதி (ஜீவ சமாதி) நிலையை அடைந்தார்.
இராகவேந்திரா
பிறப்பு
கிபி 1595 அல்லது 1598 அல்லது 1601
புவனகிரி
இயற்பெயர்
வெங்கண்ணா பட்டர்
தத்துவம்
துவைதம்
குரு
சுதீந்திர தீர்த்தர்
குரு ராகவேந்திரர் முன் அவதாரம் (தொன்மக் கதை)
சங்கு கர்ணன் என்ற தேவன், நாள்தோறும் பிரம்மதேவருக்கு மலர்கள் பறித்துச் செல்ல பூலோகம் வருவது வழக்கம். அப்போது, ஒரு நாள், அந்த மலர்களின் அழகில் இலயித்து, இந்த பூவுலகில் பிறக்க வேண்டும் என்று தன் மனத்தில் நினைத்ததை அறிந்த பிரம்மதேவர் அவரை பூவுலகில் அரக்கர் வேந்தன் இரண்ய கசிபுவின் மகன் பிரகலாதனாய் பிறக்கும் வரமளித்தார். மஹா விஷ்ணுவின் மேல் இருந்த தீவிர பக்தியினால் பிரகலாதன் அரக்கன் இரண்ய கசிபுவை வதம் செய்ய நரசிம்ம அவதாரம் எடுத்தார். தனது அடுத்த பிறவியில் பாஹ்லிகனாக பிறந்தார். பாஹ்லிகர் மஹாபாரதப் போரில் பாண்டவர்களுக்கு எதிராக போரிட்டாலும் ஒரு நல்ல ஹரி பக்தராக விளங்கினார். இவர் போரில் பீமனின் கையில் உயிர் துறந்தார் . தன் அடுத்த பிறவியில் வியாசராயராய் பிறந்து மத்வரின் தத்துவத்தை வழிபட்டார். அப்பிறவியில் தாம் செய்த தொண்டினால் திருப்தி அடையாமல் மீண்டும் குருராகவேந்திரராக அவதரித்தார்.
வாழ்க்கை முன் வரலாறு தொகு
வேங்கடநாதர் திரு திம்மண்ண பட்டர் மற்றும் திருமதி கோபிகாம்பாள் என்ற தம்பதிகளுக்கு பெருமாள் வேங்கடாசலபதியின் அருளால் மூன்றாவதாக ஒரு பிள்ளை தமிழ் நாட்டில் சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் பிறந்தது. அவர்கள் அந்த குழந்தைக்கு வேங்கடநாதன் என்று பெயரிட்டனர்.
வேங்கடநாதர் மிகச்சிறு வயதிலிருந்தே நல்ல அறிவாற்றலுடன் திகழ்ந்தார். அவரது தந்தையின் மறைவிற்கு பிறகு அவர் தன் அண்ணன் திரு குருராய பட்டரிடம் வளர்ந்தார். அவரது அடிப்படைக் கல்வியை அவர் மைத்துனர் திரு லட்சுமி நரசிம்மாசாரியாரிடம் மதுரையில் பயின்றார். அவர் மதுரையிலிருந்து திரும்பியவுடன் வேங்கடநாதர் சரசுவதி என்பவரை மணந்தார். அவரது திருமணத்திற்கு பிறகு அவர் கும்பகோணத்திற்கு குடியேறினார். அங்கே அவர் ஸ்ரீ சுதீந்திர தீர்த்தரிடம் துவைத வேதாந்தத்தையும் இலக்கியத்தையும் பயின்றார். சொற்பொழிவு ஆற்றுவதில் சிறந்தவரான அவர் பல அறிஞர்களுடன் விவாதங்களில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார். அவர் இசையில் நல்ல தேர்ச்சி பெற்றவராகவும் வீணை வாசிப்பதில் சிறந்தவராகவும் திகழ்ந்தார். அவர் குழந்தைகளுக்கு சமஸ்கிருதமும் வேதமும் கற்பித்தார். அதற்கு அவர் தன் மாணவர்களிடம் எந்த தட்சணையும் எதிர்பார்க்காததால் வறுமையில் வாழ்ந்தார். இதனால் அவரும் அவர் குடும்பமும் வாரத்தில் பல நாட்கள் பட்டினியாக இருந்தனர். இவ்வாறு வறுமையில் வாடியும் அவர் கடவுள் மேல் மிக்க நம்பிக்கையுடன் இருந்தார்.
வேங்கடநாதருக்கு மனதிற்குள்ளே ஸ்தோத்திரம் சொல்லும் பழக்கம் இருந்தது. ஒரு முறை அவர் கும்பகோணத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக குடும்பத்தோடு அழைக்கபட்டார். அழைத்தவர் வேங்கடநாதரை சரியாக நடத்தவில்லை. அவர் தான் வழங்கும் விருந்திற்கு ஏதேனும் வேலை வாங்க வேண்டும் என்று வேங்கடநாதரை சந்தனம் அரைத்துதரச் சொன்னார். அந்த சந்தனம் மற்ற விருந்தினர்க்கு உடம்பில் பூசிக்கொள்ள கொடுக்கப்பட்டது. அவ்வாறு பூசிக்கொண்ட விருந்தினர்க்கு உடல் முழுக்க எரிச்சல் ஏற்பட்டது. வியப்படைந்த அழைத்தவர், வேங்கடநாதரை கேட்டபோது அவர் சந்தனம் அரைக்கும்போது 'அக்னி சூக்தம்' என்ற தோத்திரத்தை ஜபித்ததாகவும் அதன் காரணமாகவே அந்த எரிச்சல் ஏற்பட்டதாகவும் கூறினார். இவ்வாறு கூறிய வேங்கடநாதர் வருண மந்திரத்தை ஜபித்து விருந்திற்கு வந்தவர்களின் எரிச்சலை போக்கினார். அதன் பிறகு, அழைத்தவர் தான் தவறை உணர்ந்து அவரை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டு நல்ல முறையில் கெளரவித்தும் அனுப்பினார்.
துறவறம் ஏற்ற குரு ராகவேந்திரர்
வேங்கடநாதரின் குருவான ஸ்ரீ ஸுதீந்திர தீர்த்தார் தனக்கடுத்து மத்வ மடத்திற்கு பீடாதிபதியாக ஒரு நல்ல வாரிசை தேடிக்கொண்டிருந்தார். அப்பொழுது அவர் தான் பகவான் வேங்கடநாதரே ஸுதீந்திரர்க்கு பின் மடத்த்தின் பீடாதிபதியாக ஏற்றவர் என்று கூறியதாக கனவு கண்டார். ஸுதீந்திரரும் அவர் விருப்பத்தை வேங்கடநாதரிடம் தெரிவித்தார். வேங்கடநாதர் அவர் மனைவியும் இளைய மகனையும் காப்பாற்ற வேண்டி இருந்ததால் அவரால் அப்பொறுப்பை ஏற்க இயலவில்லை. எனவே அவர் குருவின் விருப்பத்தைக் கேட்டு மிகவும் மனமொடிந்துப் போனார். எனினும் கடவுளின் இச்சையினாலும் கலைவாணியின் அருளாலும் பிறகு தனது முடிவை மாற்றிக்கொண்டார்.
வேங்கடநாதர், தஞ்சாவூரில் 1621 ஆம் ஆண்டு பால்குண மாசம், சுக்கில பக்ஷம், துவிதியை அன்று துறவறம் ஏற்று ஸுதீந்திர மடத்தின் பீடாதிபதியாக ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தராக பொறுப்பேற்றார்.
அதிசயங்களும் அற்புதங்களும்
பீடத்தை ஏற்ற பிறகு அவர் பல்வேறு யாத்திரைகளை மேற்கொண்டார். அவர் சென்ற இடமெல்லாம் ஸ்ரீமத் ஆச்சாரியாரின் சித்தாந்தத்தைய் பரப்புதல், மற்ற எதிர் சித்தாந்தங்களை ஆதரிக்கும் அறிஞர்களை விவாதத்தில் வெல்லுதல், குறிப்புகளை எழுதுதல், மாணவர்களுக்கு சாஸ்திரங்களை போதித்தல் மற்றும் உள்ளூர் அறிஞர்களை ஊக்குவித்தல் போன்ற காரியங்களில் ஈடுபட்டார். அவர் சென்ற இடமெல்லாம் தன் பக்தர்களின் குறைகளையும் உடல் ஊனங்களையும் குணமடையச் செய்து அருளினார்.
குரு ராகவேந்திரர் சுலோகம்
பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச |
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே ||
குரு ராயரின் கடைசி உரை மற்றும் பிருந்தாவன பிரவேசம்
1671 ஆம் ஆண்டு ராகவேதிர சுவாமிகள் பிருந்தாவனப் பிரவேசத்திற்கு முன் தன் பக்தர்களுக்காக மனம் நெகிழவைக்கும் ஒரு உரையை தந்தார் பரணிடப்பட்டது 2007-08-10 at the வந்தவழி இயந்திரம். அவ்வுரையிலிருந்து சில பகுதிகள்:
சரியான வாழ்க்கை நடத்தையின்றி சரியான சிந்தனை வராது.
நல்ல மற்றும் தகுதிக்குரிய மக்களுக்கு செய்யப்படும் உதவி/தர்மம் கடவுளின் பூஜைக்கு நிகராகும்
சாஸ்த்திரத்தை பின்பற்றாமல் தங்களை கடவுள் என்று கூறிக்கொண்டு அதிசயங்களை செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள். நானும் ஸ்ரீமத் ஆசாரியாரும் நிறைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறோம். அவையெல்லாம் யோக சித்தியினாலும் கடவுளின் அருளினாலும் எங்களால் செய்ய முடிந்தது. அவற்றில் எந்த பொய்யோ பித்தலாட்டமோ இல்லை. அவ்வதிசயங்கள் கடவுளின் மகிமையையும் அவர் அருளால் ஒருவர் எப்பேற்பட்ட சக்திகளை அடைய முடியும் என்று பறை சாற்றவுமே செய்யப்பட்டது. சரியான ஞானத்தை மிஞ்சிய எந்த அதிசயமோ அற்புதங்களோ கிடையாது சரியான ஞானம் இல்லாமல் செய்யப்படும் அற்புதங்கள் வெறும் சூனிய வித்தையே ஆகும். அவ்வித்தைகளை செய்பவருக்கோ அதை நம்புகிறவருக்கோ எந்த ஒரு நன்மையும் நேராது.
கடவுளின் மேல் நல்ல பக்தி இருத்தல் வேண்டும். இப்பக்தி குருட்டு நம்பிக்கையாக இருக்கக்கூடாது'. கடவுளின் மேலான்மையை முழு மனதோடு ஏற்றுக்கொள்ளுதல் பக்தி ஆகும். குருட்டு நம்பிக்கை உண்மையான பக்தி ஆகாது. அது வெறும் முட்டாள்தனமே ஆகும். நமக்கு கடவுள் மேல் மற்றுமின்றி மற்ற இதர தேவதைகளிடமும் அவர்களின் தகுதிக்கேற்ப பக்தி இருத்தல் வேண்டும்.
இவ்வாறு உரையாற்றிய பிறகு ராகவேந்திரர் பிரணவ மந்திரத்தை ஜபித்துக்கொண்டு ஆழ்ந்த தியானத்தில் இறங்கினார். ஒரு தருவாயில் அவர் கையில் இருந்த ஜபமாலை நின்றது. அந்த அறிகுறியைப் புரிந்துகொண்ட அவர் சீடர்கள் அவரை சுற்றி பிருந்தாவன சுவர் எழுப்பத் தொடங்கினார்.
Comments
Post a Comment