Temple info -1581 Somanatha Pashana Lingeswarar Temple,Timiri, Vellore சோமானாத பாஷாண லிங்கேஸ்வரர் கோயில், திமிரி, வேலூர்

 Temple info -1581

கோயில் தகவல் -1581



Somanatha Pashana Lingeswarar Temple, Timiri


The Somanatha Pashana Lingeswarar Temple in Timiri, Tamil Nadu India is a Hindu temple dedicated to Lord Shiva.


Somanatha Pashana Lingeswarar Temple


Religion

Affiliation

Hinduism


District

Vellore


Deity

Somanatha Pashana Lingeswarar (Shiva)


Location

Timiri


State

Tamil Nadu


Country

India


Geographic coordinates

12.78°N 79.29°E


Architecture

Completed

1985


Website

http://somanathapashanalingeswarartemple.in


Temple


The Somanatha Pashana Lingeswarar Temple is in Timiri in Vellore District, Tamil Nadu. In Timiri, there were efforts to build an Ayyappan Temple. There was not much progress even after strenuous efforts. On this note, Mr. Radhakrishnan, who was head of the committee constructing the temple, visited Thanjavur and got directions in Nadi (old palm manuscripts written by Sages) regarding the Pashana lingam hid 500 years back in temple tank in Timiri. Radhakrishna followed the instructions as per Nadi and searched for the pashana lingam concealed at the Thimiri Fort Somanatha Easwara Temple tank at a depth of 32 feet. With support from his spiritual friends and public of the Timiri, Radhakrishna was able to retrieve the Pashana Lingam on 14 June 1985. The bees wax, maalpacchai and the tortoise shaped shield had kept the pashana lingam intact even after so many years.


All the instructions on how to construct the temple, materials that should be used for the flagpole, their significance, the special benefits that the lingam would confer on visitors etc. were all found in the original palm leaf manuscripts. A new temple has been built on the banks of Thimiri Fort Somanatha Easwarya Temple Tank under the Peepal tree as per the naadi instructions. Thiru. A.S. Radhakrishna installed the pashana lingam within a 2+1⁄2 foot high glass box with the help of the general public and has been performing pooja and sacred ablutions to the pashana lingam with utmost sincerity for the past 25 years. Kumbabishekam of the temple was performed in September 2005. The beautiful temple turret (gopuram) adds to its glory. The wide Mahamandapam along with its beautiful entrance enhances the grace of the temple further. 


Legend


In the history of Vijayanagara Empire, Thimmi Reddy and Bommi Reddy, who were ruling with Vellore fort as Headquarters, were noteworthy kings. Their descendant, Sadhashivaraya did many good deeds in Divakarayar Ellai, a rural location next to Arcot in those days. In his rule, there was a wide spread epidemic, due to which people suffered a lot. Being very pious and caring, the King Sadhashivaraya discussed this with 'Raja Panditha Sironmani, Manthira Vaidhya Kesari' Kannika Parameswara Andhanar, who was the Raja vaidhyar (doctor) of his kingdom.


Vaidhyar, on Dhanvanthri methods, used 5 Chandra Pashanams, to make a lingam, called Somanatha Eeswara Pashana Lingam. Chandra pashanams are related to moon and the rays of moon will induce them to have better medicinal effect. The lingam measured 6 inches in height. Timiri is name of one of the Pashanams used to make this Lingam.


In the Tamil month of Thai's Arudhra star of 1379 A.D., the lingam's pradhishtai was carried out inside the Thimiri fort by Sringeri Mutt's 12th Sankarachariyar, Shri Vidhyaranya Swamigal. Since the lingam was made on both Agama and Siddha medicine rules, the Abhishega theertham served the purpose of curing diseases. Owing to the fame of lingam, the area which was known as Divakarayar Ellai, was renamed as Thimiri.


Later, when Arcot Namab invaded this area, the Vellore Fort was also captured. The Muslims plundered temples and other sacred places in this area. Kannika Parameswarar protected his rare and special pashana lingam from the invaders as follows. He smeared beeswax on the lingam, placed it inside a tortoise shaped shield made with special chemicals. The Lingam and the shield were placed within a triangular box that was created with geographic principles and hid it in the temple tank in the year 1454 A.D. The Royal medicine man rushed along with his group to the border of Kanchipuram to escape from being captured by the invaders. The Muslim soldiers, who heard about their escape from the spies, captured them and brought them to Sri Renukambhal temple at Aanaimalloor near Timiri. They were killed by letting an elephant step on them. At the time of being trampled by the elephant, Kannika Parameswarar swore on Lord Shiva that if at all he has another birth he will rescue the lingam and will reinstall it.


Speciality


Timiri Pashana lingam cannot be found anywhere else. It is not a mere lingam but one with special radiations that can travel great distances. The medicinal property of the water from sacred ablution of the pashana lingam grants the state of makaara[what language is this?] in the heart, corrects heart's function, kidney diseases and grants several benefits in life. As the lingam is created using Timiri pashanam, it can sublime. Hence, water is trickled over it continuously to keep it cool. Those who consume this sacred water are blessed with physical and mental well-being.


The fact that all these information about the pashana lingam are found in the Thiruvaavaduturai Adheenam's work, Skandar Manimaalai Sadhagam is worth mentioning. The emergence of this lingam was predicted by not only the above-mentioned work but also by great Saints like Vittobha Swamigal, Seshadri Swamigal and Poondi Mahaan.


When those with nervous disorders, heart problems and hypertension touch the dvajasthamba of this temple and worship it, it gives them a shock treatment. The secret behind the universal electronic store chamber form of Somanatha Pashana Lingeswarar temple is that those who are suffering from mental diseases, depression and loss of memory will benefit by worshiping the dvajasthamba through the sacred touch worship ritual. Those who doubt it will realize it when they have firsthand experience of it.


Just as how the power of the Sun and the Moon does not decrease over time this pashana lingam remains with its immense power and fully completeness. When pure water, honey, milk, sacred ash, bilva leaves, rock candy and other medicinal products listed by Sage Agasthya in the nadi leaves, are offered to the pashana lingam through sacred ablution and consumed with devotion, the skin problems, mental problems, diabetes, hypertension and nervous disorders encountered these days, will be cured.


Festival


Daily worship rituals are performed both in the morning and in the evening and the theertha prasadam is distributed to the devotees. Special ablutions to the Pashana lingam, such as that with honey are performed on full moon days. Special full moon days are in the Tamil months of Chitirai, Kaarthigai, Thai and Panguni. Aani Thirumanjanam and special prayer rituals on Arudra nakshatra days are being performed.


The temple is open from 6:30 am to 1 pm and 4 pm to 8:30 pm.



நோய்களை தீர்த்து வைக்கும் திமிரி சோமநாத பாஷாண லிங்கேஸ்வரர் கோவில்

சென்னை

நோய்களை தீர்த்து வைக்கும் திமிரி சோமநாத பாஷாண லிங்கேஸ்வரர் கோவில்


ஆகம முறைப்படியும், சித்த மருத்துவ முறைப்படியும் அமையப்பெற்ற இந்த பாஷாண லிங்கம், நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அருள் வழங்கியது.

தமிழகத்தில் உள்ள கோவில்கள் ஒவ்வொன்றும் ஒரு அற்புதங்களை தனக்குள் வைத்துக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் தீராத நோய்களை தீர்த்து வைக்கும் திமிரி சோமநாத பாஷாண லிங்கேஸ்வரர் கோவில். இந்த ஆலயத்தில் வரலாறு 500 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. விஜயநகர பேரரசின் கீழ், திம்மிரெட்டி, பொம்மி ரெட்டி ஆகியோர் வேலூர் கோட்டையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தனர். குறுநில மன்னர்களான இவர்களது வழித்தோன்றல்தான் சதாசிவராய மன்னர். இவர் ஆற்காட்டை அடுத்த திவாகராயர் எல்லைப் பகுதியில் பல நல்ல காரியங்களைச் செய்து வந்தார்.

ஒரு சமயம் அந்தப் பகுதியில் தொற்று நோய் ஏற்பட்டு மக்கள் அனைவரும் அவதிப்பட்டனர். இரக்க குணமும், இறை பற்றும் மிக்க சதாசிவராயர், இதனைக் கண்டு வேதனை அடைந்தார். நோயை விரட்டும் வழி குறித்து, அமைச்சரவையைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். அரண்மனை ராஜ வைத்தியரான கன்னிகா பரமேஸ்வரரிடம், மக்களின் நோயைப் போக்க ஏதாவது செய்யும்படி பணித்தார். மன்னனின் ஆணைப்படி ராஜவைத்தியரான கன்னிகா பரமேஸ்வரர், தன்வந்திரி முறையில் ஒரு லிங்கத்தை தயார் செய்ய முடிவு செய்தார். சந்திர பாஷாணம் எனப்படும் திமிரி பாஷாணம் உள்பட 5 வகை பாஷாணங்களை பக்குவப்படுத்தி, தெய்வாம்சமும், மருத்துவ குணமும் இரண்டற கலந்திருக்கும் வகையில் சோமநாத ஈஸ்வர பாஷாண லிங்கத்தை வடிவமைத்தார். இந்த லிங்கத்தின் உயரம் வெறும் 7 அங்குலம் மட்டுமே.

கி.பி.1379–ம் ஆண்டு தை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில், திமிரி நகரின் கோட்டையில் இந்த பாஷாண லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போதைய சிருங்கேரி மடத்தின் 12–வது சங்கராச்சாரியார் வித்யாரண்ய சுவாமிகள் ஆசீர்வாதத்துடன் இந்த பிரதிஷ்டை விழா நடந்தது. ஆகம முறைப்படியும், சித்த மருத்துவ முறைப்படியும் அமையப்பெற்ற இந்த பாஷாண லிங்கம், நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அருள் வழங்கியது. திமிரி லிங்கம் பாஷாணத்தால் உருவாக்கப்பட்டதால், புகையும் தன்மை கொண்டது. எனவே லிங்கத்தை குளிர்விக்கும் வகையில் அதன் மீது எப்போதும் நீர் விழுமாறு செய்யப்பட்டது. அந்த அபிஷேக தீர்த்த நீரே, நோய் தீர்க்கும் பிரசாதமாக மாறியது.


அதுவரை திவாகராயர் எல்லை என்று அழைக்கப்பட்ட இந்த பகுதி, திமிரி பாஷாண லிங்கத்தின் பெருமையால் ‘திமிரி’ என பெயர் மாற்றம் கொண்டது. மக்கள் நோய் குணமாவதைக் கண்ட மன்னன் சதாசிவராயர் பெருமகிழ்ச்சி அடைந்தார். பக்தி பரவசத்தில் மிதந்தார். ஆனால் சோதனைகள் மனிதர்களுக்கு மட்டுமே வருவதல்லவே.. சில சமயங்களில் கடவுள்களுக்கும் கூட சோதனை ஏற்படுவதுண்டு. அந்தச் சோதனை படையெடுப்பின் வாயிலாக வந்தது. ஆற்காடு நவாப் படை எடுப்பின் போது வேலூர் கோட்டை பிடிபட்டது. திமிரி கோட்டை அவர்கள் கட்டுக்குள் வந்ததால், கோட்டை இடிக்கப்பட்டது. திமிரி பாஷாண லிங்கத்தை பாதுகாக்கும் பொருட்டு, வேதியியல் கலவையிலான கூர்ம வடிவ கூட்டுக்குள் வைத்தனர். அதன்பிறகு அந்த லிங்கத்தை, திமிரி சோமநாத ஈஸ்வரர் கோவிலின் அருகில் இருந்த குளத்தில் புதையச் செய்தனர்.

500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த வரலாற்றின் தொடர்ச்சி, கடந்த 1985–ம் ஆண்டு மீண்டும் தொடங்கியது. அப்போது திமிரியில் ஐயப்பன் கோவில் கட்டும் பணி நடைபெற்றது. ஒரு கட்டத்தில் அந்தப் பணி தடைபட்டது. ‘கோவில் நிர்மாணிக்கும் பணியில் ஏதேனும் தெய்வ குற்றம் நிகழ்ந்து விட்டதோ?’ என சந்தேகம் கொண்ட, திமிரி ஐயப்பன் நற்பணி மன்ற நிர்வாகி ராதாகிருஷ்ணன் என்பவர் ஒரு நாடி ஜோதிடரை அணு கினார். அப்போது, திமிரி சோமநாத ஈஸ்வரர் ஆலய குளத்தில் புதைந்து போன பாஷாண லிங்கம் பற்றிய செய்தி தெரியவந்தது. மேலும், அந்த பாஷாணலிங்கம், ராதாகிருஷ்ணன் முயற்சியால் குளத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு மீண்டும் பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பெருமுயற்சி மேற்கொண்டு, கோவில் குளத்தில் புதைத்ததாக கூறப்பட்ட பாஷாண லிங்கத்தை தேடினார். இறுதியில் 1985–ம் ஆண்டு ஜூன் மாதம் 14–ந் தேதி வெள்ளிக் கிழமை குளத்தில் இருந்து பாஷாணலிங்கம் கிடைத்தது.

இதையடுத்து அந்த பகுதியிலேயே திமிரி சோமநாத பாஷாண லிங்கேஸ்வரருக்கு ஆலயம் எழுப்பப்பட்டது. இந்தலிங்கம் தற்போது நீர் நிரப்பப்பட்ட கண்ணாடி தொட்டிக்குள் வைக்கப்பட்டு, பக்தர்களுக்கு காட்சி தருகிறது. இந்த நீர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. பாஷாணலிங்கம் இருந்த இந்த நீரை அருந்துபவர்களுக்கு நோய்கள் தீருவதாக நம்பப்படுகிறது. திமிரி பாஷாணலிங்கேஸ்வரர் கோவில் வெளிப்புற வளாகத்தில் அரசமர விநாயகர், சப்த கன்னியர், சுயம்பு சதுரகிரி சிவன், அகத்தியர், தட்சிணாமூர்த்தி உள்பட பரிவார தெய்வங்கள் உள்ளன. கோவில் உள்புற வளாகத்தில் சந்திரகலா சோமநாயகி அம்மனுக்கு தனிசன்னிதி உள்ளது. இந்த சன்னிதியானது லிங்க வடிவிலேயே அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு அருகில் பாஷாணலிங்கம் கிடைத்த சோமநாத ஈஸ்வரர் கோவில் குளத்தின் அருகில் பெரிய அளவில் யோக நிலையில் இருக்கும் சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. பாஷாண லிங்கம் கிடைத்த பெரிய குளத்தில், லிங்கம் கிடைத்த பகுதியை மட்டும் சிறிய குளம்போல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த சிறிய குளத்தில் இருந்து எடுக்கப்படும் நீரையே கோவில் கும்பாபிஷேகம் மற்றும் அபிஷேகத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்று நாடி ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

Comments

Popular posts from this blog

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்

5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்