Temple info -1528. Veerabhadra Swamy Temple, Rayachoti, Cuddapah. வீரபத்திரர் கோயில், ராயசோடி, கடப்பா

 Temple info -1528

கோயில் தகவல் -1528



Rayachoti Veerabhadra Swamy Temple, Rayachoti

 

About Rayachoti Veerabhadra Swamy


The Veerabhadra Swamy temple itself is 1000-years old. According to the legends, Sati was the youngest daughter of Daksha, the chief of the gods. When Sati grew up she set her heart on Shiva, worshipping him in secret. In the Swayamvara of Sati, Daksha invited all gods and princes except Shiva. Sati cast her wreath into the air, calling upon Shiva to receive the garland; and behold him stood in the midst of the court with the wreath about his neck. Daksha had no choice but to share Sati with Shiva.


One day Daksha made arrangements for a great horse sacrifice and invited all the gods except  Shiva. Sati was enraged by this deliberate exclusion of Shiva and set out to attend, and confront her father Daksha. She instructed her father that Shiva was the Supreme Being of the Universe and demanded her father Rayachoti. Daksha then went on to insult Shiva; and as Sati’s rage at the disrespect toward Shiva peaked, she declared to her father, I will tolerate no more of your filth and she released the inner consuming fire, and fell dead at Daksha’s feet.


Then Lord Shiva came to know about this incident through meditation and became furious at the non-righteous yagna. Shiva burned with anger, and tore a lock of hair, glowing with energy in Kailas Rayachoti. At that moment, was born the son of Lord Shiva, Lord Veerabhadra, the destroyer of agnana, sprang from it, his tall body reached the high heavens, he was dark as the clouds, he had a thousand arms, three burning eyes, and fiery hair; he wore a garland of skulls and carried terrible weapons. Veerabhadra bowed at Shiva’s feet and asked for his will. Shiva replied, ‘Spoil the sacrifice of Daksha’.


Then the mighty Veerabhadra, having heard the pleasure of his lord, bowed down his head to the feet of Shiva; and starting like a lion loosed from bonds, despoiled the sacrifice of Daksha, knowing that this had been created by the displeasure of Devi. She took in her wrath, as the fearful goddess Rudrakali, accompanied him, with all her train, to witness his deeds. – Vayu Purana Shiva directed Veerabhadra: “Lead my army against Daksha and destroy his sacrifice; fear not the Brahmans, for thou art a portion of my very self.


On this direction of Shiva, Veerabhadra appeared with Shiva’s ganas amid Daksha’s assembly like a storm and broke the sacrificial vessels, polluted the offerings, insulted the priests and finally cut off Daksha’s head, trampled on Indra, broke the staff of Yama, scattered the gods on every side; then he returned to Kailas Rayachoti. When confronted with Vishnu, according to Skanda Purana, Veerabhadra defeats Vishnu which seems improbable since Lord Vishnu is the killer of Demons.


This is a temple Rayachoti for Lord Veerabhadra with a tall tower. Daksha appears in worshipping form near the Lord in the sanctum sanctorum. The Shiva Lingam worshipped by Sage Mandavya is on the right of the Lord. The first puja is dedicated to the Shivalinga and then to Lord Veerabhadra.


During morning hours Lord appears in Bala rupa and as a hero with a mustache in evening hours. As in Lord Vishnu temples, here too Sadari blessing with the lotus feet of the Lord is offered to devotees. Betel leaf is the Prasada in the temple Rayachoti. Sri Nandeeswarar blesses from a shrine with Vimana outside the Rajagopuram. Opposite the shrine of Lord Veerabhadra,, there are two Nandhis-Veera Nandi and Shiva Nandi for Lords Veerabhadra and Shiva Rayachoti. They are just a little away from the sanctum sanctorum. There is also a Nandi before Ambica Badrakali.


The rays of the Sun fall on Lord Veerabhadra Swamy for five days in March. The rays fall on the feet of the Lord on the first day and go upward each day and touch the face on the fifth day.


Timings to visit Rayachoti Veerabhadra Swamy

  05:00 AM – 12:30 PM | 04:00 PM – 08:30 PM


Seva Details

Seva


INR


Rudrabhishekam 516/-

Nandi Pooja 500/-

Rudrabhishekam 250/-

Irumudi 100/-

Vahana pooja 2 wheeler 50/-

Vahana Pooja 4 Wheeler 100/-

Astottara Bilvarchana 50/-

Aku Pooja 50/-

Malaradhana 50/-

Kumkumarchana 25/-

Kesha Kandana 25/-

Archana 10/-

Saswatha Pooja Details


Seva


INR


Nitya Naivedhya 1516/-

Rudrabhishekam 3500/-

Kumkumarchana 3500/-

Amavasya Pooja 4000/-

Annadanam 3016/-

Festivals celebrate 


Spilling the rice – Following Sivarathri pujas in February-March, Brahmostavam is celebrated for 11 days in the temple. The killing of Daksha event takes place on the eighth day. A quantity of 365 measures of rice is cooked with pumpkins and other preparations as Athirasam and roots. It is heaped as a hill. They spilled it throughout the place with the sword of Lord Veerabhadra violently as the yagasala of Daksha was ransacked by Veerabhadra according to the ancient story. This rice is offered as Prasad. During this event, Lord Veerabhadra will have the forehead eye as Lord Shiva.


Masi Brahmotsavam – February – March


Thirukarthikai – Karthika Masam


How to Reach Rayachoti Veerabhadra Swamy

By Air: Kadapa Airport


By Train: Kadapa Railway Station – 48 km, Kadiri  – 55 km, Rajampeta – 57 km


By Bus: Kadapa – 47 km, Kadiri – 53 km, Rajampeta – 59, Kalikiri 45 km


Address

Sri Badhrakaali sametha Veerabhadra Swamy Devasthanam, Rayachoti, kadapa District, 516269, Andhra Pradesh, India.



அருள்மிகு வீரபத்திரர் திருக்கோயில் - ராயசோட்டி - கடப்பா (ஆந்திர பிரதேசம்)


மூலவர் :-வீரபத்திரர் (ராஜராயுடு)

அம்பாள் :-பத்ரகாளி  


தல சிறப்பு:

மார்ச் மாதத்தில் ஐந்து நாட்கள் வீரபத்திரர் மீது சூரிய ஒளி விழுகிறது. முதல் நாளில் காலில் விழும் ஒளி, அடுத்தடுத்த நாட்களில் படிப்படியாக உடலில் விழுந்து, ஐந்தாம் நாள் முகத்தில் விழும்.


பொது தகவல்:

திங்கள்தோறும் வீரபத்திரர், பத்திரகாளி இருவரும் பல்லக்கில் எழுந்தருளுகின்றனர். உயர் பதவி, தலைமை பொறுப்பு கிடைக்க பக்தர்கள் வீரபத்திரருக்கு அபிஷேகம் செய்வித்து, குதிரையில் அமர்ந்த கோலத்தில் அலங்காரம் செய்து வழிபடுகின்றனர். இதற்கு கட்டணம் ரூ.450. அம்மை, தோல் வியாதி ஏற்பட்டவர்கள் வீரபத்திரர் பாதத்தில் தேங்காய் வைத்து பூஜித்து, தேங்காய் தண்ணீரைப் பருகியும், உடலில் தேய்த்தும் வேண்டிக் கொள்கின்றனர். இத்தல வீரபத்திரருக்கு "ராஜராயுடு" (அனைவருக்கும் தலைவர்) என்ற பெயரும் உண்டு. ஆவுடையின் மீது சிவலிங்கத்தை பார்த்திருக்கலாம். ஆனால், இக்கோயிலில், ஆவுடையின்மீது சிவன், சுயரூபத்துடன் காட்சி தருகிறார். இவரை "ஆவுடைசிவன்" என்கிறார்கள். வரசித்தி விநாயகர், காலபைரவர், எல்லம்மன், சண்முகர், இரட்டை லிங்கம், அகோரசிவன், நவக்கிரக சன்னதிகளும் உள்ளன. இங்குள்ள கோபுரம் 3 நிலைகளை கொண்டது.


தலபெருமை:

சடாரி சேவை: ராஜகோபுரத்துடன், வீரபத்திரருக்கென பிரதானமாக அமைந்த பெரிய கோயில் இது. மூலஸ்தானத்தில் வீரபத்திரர் அருகில் தட்சன் வணங்கியபடி அமர்ந்திருக்கிறான். வீரபத்திரருக்கு வலப்புறத்தில் மாண்டவ்யர் பூஜித்த சிவலிங்கம் இருக்கிறது. இந்த லிங்கத்திற்கு பூஜை செய்த பிறகே, வீரபத்திரருக்கு பூஜை செய்கின்றனர். வீரபத்திரர் காலையில் பால ரூபமாகவும், மாலையில் மீசையுடன் வீர கோலமாகவும் காட்சி தருகிறார். பெருமாள் தலங்களைப் போல, இங்கும் வீரபத்திரரின் பாதம் பொறித்த சடாரியால் ஆசிர்வாதம் செய்யப்படுகிறது. வெற்றிலையை பிரதான பிரசாதமாகத் தருகின்றனர்.


அம்பாள் அருகில் நந்தி: ராஜகோபுரத்திற்கு வெளியில் விமானத்துடன் கூடிய தனி மண்டபத்தில் நந்தீஸ்வரர் இருக்கிறார். வீரபத்திரர் சன்னதி எதிரில் சிவன், வீரபத்திரர் இருவருக்குமாக வீர நந்தி, சிவ நந்தி என இரண்டு நந்திகள் உள்ளன. இந்த இரண்டு நந்திகளும் சன்னதியிலிருந்து விலகியிருப்பது வித்தியாசமான அமைப்பு. பத்ரகாளி சன்னதி அருகிலும் ஒரு நந்தி இருக்கிறது.


சாதத்தை சிதறடிக்கும் நிகழ்ச்சி: சிவராத்திரியை ஒட்டி 11 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. எட்டாம் நாளில் தட்சன் வதம் வைபவம் நடத்தப்படுகிறது. அப்போது வீரபத்திரர் சன்னதி எதிரில் 365 படி சாதம், பூசணிக்காய், அதிரசம், கிழங்கு ஆகியவற்றை மலை போல குவித்து, வீரபத்திரரிடம் உள்ள கத்தியால், அன்னத்தை (சாதம்) கிளறி சன்னதி முழுவதும் சிதறடிக்கின்றனர்.வீரபத்திரர், தட்ச யாகத்தை துவம்சம் செய்ததன் அடிப்படையில் இவ்வாறு செய்யப்படுகிறது. இந்த அன்னமே பிரசாதமாக தரப்படும். இந்நிகழ்ச் சியின்போது மட்டும் வீரபத்திரருக்கு நெற்றிக்கண் வைக்கப்படுகிறது.


தல வரலாறு:

தன்னை அழைக்காமல் தட்சன் யாகம் நடத்தியதால் சிவன் தனது அம்சமான வீரபத்திரரை அனுப்பி யாகத்தை அழிக்க உத்தரவிட்டார். யாகத்தை அழித்தபின்பும் வீரபத்திரரின் உக்கிரம் தணியவில்லை. இந்நேரத்தில், மாண்டவ்ய மகரிஷி என்பவர், வீரபத்திரரின் தரிசனம் வேண்டி சிவலிங்கம் அமைத்து தவமிருந்தார். வீரபத்திரர் அவருக்கு உக்கிரமாக காட்சி கொடுத்தார்.இதைக்கண்ட மகரிஷி அம்பிகையிடம் அவரைச் சாந்தப்படுத்தும்படி வேண்டினார். அதன்படி அம்பாள் பத்ரகாளியாக இங்கு வந்தாள். வீரபத்திரர் சாந்தமானார். இருவரும் தான் தவமிருந்த இடத்தில் எழுந்தருளும்படி வேண்டினார் மாண்டவ்யர். அத்தலமே தற்போதைய ராயசோட்டி. பிற்காலத்தில் மன்னன் ஒருவன், இங்கு கோயில் எழுப்பினான்.


நன்றி மாலதி முரளிTemple

Comments

Popular posts from this blog

Temple info -976 Sarva Siddhi Vinayakar Temple, Regal Palm Garden, Velachery, Chennai சர்வ சித்தி வினாயகர் கோயில், ரீகல் பால்ம் கார்டன், வேளச்சேரி, சென்னை

Temple info -150 Thirupparaithurai Tharugavaneswarar temple திருப்பராய்துறை தாருகவனேஸ்வரர் கோயில். Padal Petra Sthalam No.120

Temple info -2066 Sastha Preethi சாஸ்தா ப்ரீத்தி