Temple info -150 Thirupparaithurai Tharugavaneswarar temple திருப்பராய்துறை தாருகவனேஸ்வரர் கோயில். Padal Petra Sthalam No.120

 Temple info -150

கோயில் தகவல் -150







Thirupparaitturai is a village in the Srirangam taluk of Tiruchirappalli district in Tamil Nadu, India. It is situated on the south bank of the River Cauvery. Trichy-Karur National High Way, Trichy-Palakkad Railway Line (Railway Station: Elamanur) have been laid through this village. It is 16 kilometers away from Trichy.

Religion

Affiliation

Hinduism


Deity

Tharugavaneswarar (Paraithurai Nather, Paraithruai Selvar)(Shiva) Pasumpon Mayeelambikai (Hema Varnambikai) (Parvati), Rajagopalan Swami (रजगोपालन स्वामी)


Features

Temple tank: Parai Tree


Location

Location

Tamil Nadu, India


State

Tamil Nadu


Country

India


Architecture

Type

Dravidian architecture


History


The ancient Shiva Temple is at a bosom of this village. There were a lot of parai trees in ancient days. As parai trees had grown in abundance in this village in olden days this village is called Thiru "parai" thurai. This village is also a home to Shri Rajagopalan Swami. The 150 year old temple is adjacent to the Shiva temple.


Boundary of the village

East : Elamanur West : Perugamani South: Analai North: The Holy River Cauvery



Legends


Sri Ramakrishna Tapovanam  founded by Swami Chidbhavananda and Ramakrishna Kudil founded by Bramhachari Ramaswamy are the famous institutions doing commendably Yeoman and meritorious services in the academic domain and in the spiritual sphere from this village.


The Temple


This place is a Padal petra sthalam. The great Nayanars and ArunagiriNathar have sung in praise of the presiding deity of Thirupparaitturai temple.


History of the temple


This is the place then known as Tharugavanam where Lord Shiva as Pitchardanar destroyed the pride of Tharugavana Hermits.


Long long ago Tharugavana Hermits became oblivious (unmindful) Lord Shiva and thought that they could be omnipotent through their own spiritual powers. They chanted numberless prayers, and performed numberless poojas and sacrifices. They slighted and forgot Lord Shiva completely.


Knowing all those things, Lord Shiva sent Lord Vishnu in Mohini Avatar (a beautiful woman) to set right the hermits who had gone astray. All Tharugavana Hermits felt drawn towards Mohini by the silken bonds of love. They felt irresistibly attracted towards the infinite charm and exquisite beauty of Mohini. They all forgot their prayers, poojas and everything.


Lord Shiva himself went as Pitchadanar (a handsome youth) to the ladies of Tharugavana hermits. They also fell in love with Pitchadanar and lost their purity.


At this the Tharugavana Hermits felt enraged and performed Homas and Yagas. They brought forth a Tiger by the strength of their Tapas and sent it to kill Shiva. But Lord Shiva slaughtered the tiger and wore the skin as his typical dress. Lord Shiva took their thrisul as his weapon. Their baby deer was placed on his left hand. Their snakes were worn as ornaments by Lord Shiva.


Lord Shiva, otherwise piously called Tharugavaneshwarar, ParaithuraiNather, ParaithuraiSelvar is being worshipped by the large number of people since 7th century A.D.


The Total area of the land which the holy Temple is situated is more than 5 acres (20,000 m2). The temple is surrounded by a gigantic boundary wall.


When we enter through the main gate, an ornamented arch, the seven tiered RajaGopuram, a holy tank, and a hundred pillar mandapam (The present Vivekandha Primary School). These things enable and enhance the sanctity of the ambience there.


As we enter the RajaGopuram, there we see a NandhiMandapam. Nandhi, a flag pillar(Dhwajasthambam) and a sacrificing altar(Balipeedam).


When we pass through this area the Inner Temple with prakaram(closed precincts of a temple) starts. There is another Gopuram in front of the inner temple. Mulavar Sannithi, Ambal Sannithi, Ancient sculptures, Vaganams, a holy well and other deities are seen inside the temple.


SthalaVirutcham(Tree of the Temple) is behind the inner Temple.


The Root (old temple) belongs to "Early Chola period" of 7th century. The temple was then renovated by V.V.R. Nagappa Chettiar of KanaduKathan.


Gods & Goddness


God : Tharugavaneswarar (Paraithurai Nather, Paraithruai Selvar)


Goddess : Pasumpon Mayeelambikai (Hema Varnambikai)


Lingam : Suyambu Lingam (Natural)


Temple Tree : Parai Tree.


Side Gods :


1. Valamburi Vinayagar 2. Saptha Kanniyar (Seven Sisters) 3. 63 Nayanmars 4. Somas Kandhar 5. Pancha Pootha Lingams 6. Murugan, Shanmugan with Valli Deivanai 7. MahaLakshmi 8. Durga Lakshmi 9. Pitchadanar 10. Brahmma 11. Durgai 12. Shandeshwarar 13. Pannirukai(12 hand) Shanmugar 14. Suriyan, Chandran 15. Selva Vinayagar 16. Azhagia Natarajar 17. Saneeshwarar riding on crow 18. Other Navagrahas 19. Kala Bairavar 20. Dhakshnamoorthi (equal to famous Alangudi Dhakshina Moorthi


Contact No.9940843571/0431-2614063


"பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை

நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே"


பராய்த்துறைநாதர் திருக்கோயில் - திருப்பராய்த்துறை 


 திருக்கோயில் - தல வரலாறு


இறைவர் திருப்பெயர் :பராய்த்துறைநாதர், தாருகாவன நாதர்


இறைவியார் திருப்பெயர் : பசும்பொன்நாயகி, ஹேமவர்ணாம்பிகை


தல மரம் : - பராய் மரம்


தீர்த்தம் : -  அகண்ட காவேரி


வழிபட்டோர் : தாருகாவனம் ரிஷிகள், அருணகிரிநாதர்


தேவாரப் பாடல்கள் :-திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர்


பராய் மரக்காட்டில் இறைவன் எழுந்தருளியிருப்பதால் இத்தலம் 'பராய்த்துறை' எனப்படுகிறது.


இத்தலத்திற்கு 'தாருகாவனம்' என்றும் பெயருண்டு. பராய் மரம் சமஸ்கிருதத்தில் 'தாருகா விருக்ஷம்' எனப்படுகிறது.


இறைவன் பிட்சாடனராய்ச் சென்று தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அகற்றி அவர்கட்கு அருள்புரிந்தார்


முருகன் வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரை குறித்து அருணகிரியார் திருப்புகழில் பாடியுள்ளார். இவருக்கு அருகில் மற்றொரு சன்னதியில் இருக்கும் தண்டாயுதபாணி காலில் செருப்பு அணிந்த கோலத்தில் இருக்கிறார்.


தல வரலாறு:


சுவாமி சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார்.


சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 66 வது தேவாரத்தலம் ஆகும்.


இத்தலத்தில் தவம் செய்து வந்த தாருகவன முனிவர்கள் தான் என்ற அகந்தையால் மமதை கொண்டனர். தாங்கள் செய்யும் வேள்விகளே முதன்மையானது என்றும் அதனால் இறைவனை துதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கருதி நடந்து கொண்டனர்.


சிவனும், மகாவிஷ்ணுவும் அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணினர். சிவன் காண்போரைக் கவரும் பேரழகுடன் பிட்சாடனராக கையில் திருவோடு ஏந்திக் கொண்டார்.மகாவிஷ்ணு அழகே உருவான மோகினி எனும் பெண்ணாக மாறினார்.


இருவரும் தாருகாவனம் வந்தனர். ரிஷிகள் பெண் வடிவில் இருந்த மகாவிஷ்ணுவின் அழகில் மயங்கி அவரை பின்தொடர்ந்தனர். தங்கள் மனைவியர் பிச்சை எடுக்கும் ஒருவனுடன் சென்றதைக் கண்ட ரிஷிகள், வந்திருப்பது ஏதோ மாயக்காரன் என்றெண்ணி அவரை தாருகாவனத்தை விட்டுச் செல்லும்படி விரட்டினர். இருவரும் செல்ல மறுத்தனர்.


முனிவர்கள் இறைவனை அழிக்க மாபெரும் யாகம் செய்தனர். யாக குண்டத்திலிருந்து தோன்றிய புலிகளை இறைவன் மீது ஏவினர். சிவபெருமான் அவற்றைக் கொன்று தோலை ஆடையாக அணிந்து கொண்டார். முனிவர்கள் பிறகு மானை ஏவினர். இறைவன் அவற்றை அடக்கி தனது இடக்கரத்தில் ஏந்திக் கொண்டார். முனிவர்கள் பாம்புகளை ஏவ சிவபெருமான் அவற்றைத் தனது அணிகலன்களாக்கி கொண்டார். பூதகணங்களை முனிவர்கள் ஏவினர். எதனாலும் இறைவனை வெல்ல முடியவில்லை என்று தெரிந்து கொண்ட முனிவர்கள் ஞானம் பெற்று வந்திருப்பது பரம்பொருள் சிவபெருமானே என்பதைப் புரிந்து கொண்டு மமதை அடங்கி இறைவனிடம் தஞ்சம் அடைந்தனர். இறைவன் அவர்களை மன்னித்து அவர்களுக்கு தாருகாவனேஸ்வரராக காட்சி அளித்தார்.



கோவில் அமைப்பு


இத்தலத்து இறைவன் ஒரு சுயம்பு லிங்கமாக தாருகாவனேஸ்வரர், பராய்த்துறை நாதர் என்ற திருநாமங்களுடன் கிழக்கு நோக்கியும், இறைவி பசும்பொன் மயிலாம்பிகை, ஹேம வர்ணாம்பிகை என்ற திருநாமங்களுடன் தெற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர். ஆலயத்தின் முன் உள்ள மண்டப வாயிலில் மேலே சுதையால் ஆன ரிஷபாரூடர் சிற்பம் உள்ளது. வாயில் வழியாக உள்ளே நுழைத்தவுடன் இடதுபுறம் குளம் உள்ளது. வலதுபுறம் உள்ள கல் மண்டபத்தில் (வசந்த மண்டபத்தில்) விவேகானந்தர் தொடக்கபள்ளி நடைபெறுகின்றது.


நேரே இராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் உள்ளது. முகப்பில் விநாயகர் காட்சி தருகிறார். இராஜகோபுர வழி உள் நுழைந்தால் நேரே செப்புக் கவசமிட்ட கொடிமரம். இதுவும் பலிபீடமும் நந்தியும் சேர்த்து ஒரு மண்டபத்தில் உள்ளன. இது நந்தி மண்டபம் எனப்படும். இத்தூண்களில் சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் உருவங்களும், திருப்பணி செய்த செட்டியாரின் உருவமும் உள்ளன. வெளிப்பிராகாரத்தில் விநாயகரும் தண்டபாணியும் உள்ளனர்.


அடுத்துள்ள கோபுரம் ஐந்து நிலைகளையுடையது. உள்ளே நுழைந்ததும் நேரே கிழக்கு நோக்கிய மூலவர் சந்நிதி தெரிகின்றது. உள்சுற்றில் வலம்புரி விநாயகரும், சப்தகன்னியரும், 63 மூவரும் உள்ளனர். அடுத்து சோமாஸ்கந்தர், மகா கணபதி, பஞ்சபூத லிங்கங்கள், ஆறுமுகர், பிட்சாடனர், பிரம்மா, துர்க்கை, கஜலட்சுமி, சண்முகர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன. நவக்கிரகங்களுள் சனீஸ்வரனுக்கு மட்டும் காக்கை வாகனமுள்ளது. பைரவரும் உள்ளார்.


கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகரும், தட்சிணாமூர்த்தியும், இலிங்கோத்பவர் இடத்தில் அர்த்தநாரீஸ்வரரும், பிரம்மாவும், துர்க்கையும் உள்ளனர். சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. சிங்கங்கள் தாங்கி நிற்கின்ற அழகிய வேலைப்பாடமைந்த தூண்கள் - பரந்த கல்லால மர வேலைப்பாடுடன் உள்ளன. நடராசர் சந்நிதியும் இங்குள்ளது. துவாரபாலகர்களைத் தரிசித்து உட்சென்று மூவலரைத் தரிசிக்கலாம். மூலவர் அழகான திருமேனி. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. அம்பாள் மண்டபத்தில் உள்ள முன்தூணில் ஊர்த்துவ தாண்டவ சிற்பமும், எதிர்த் தூணில் காளியின் சிற்பமும் உள்ளன.


பிட்சாடனராக வந்த சிவன் அர்த்த மண்டபத்தில் உற்சவர் வடிவில் இருக்கிறார்.முன்மண்டபத்தில் 12 ராசிகள் குறித்த கட்டம் மேல் விதானத்தில் இருக்கிறது. இதற்கு கீழே நின்றுகொண்டு சிவ லிங்கத்தையும், பிட்சாடனாரையும் ஒரே நேரத்தில் வழிபட்டால் ராசி மற்றும் கிரகதோஷங்கள் நீங்கும் என்கிறார்கள்.


பிரகாரத்திலும் பிட்சாடனார் சிலை இருக்கிறது. பல்லாண்டுகளுக்கு பின்பு இத்தலம் பராய் மரங்கள் நிறைந்த வனமாக இருந்தபோது, சிவலிங்கம் இருந்ததைக் கண்டு கோயில் எழுப்பப்பட்டது.சுவாமியும் "பராய்த்துறை நாதர்' என்ற பெயர் பெற்றார். கருவறைக்கு பின்புள்ள பிரகாரத்தில் தலவிருட்சம் பராய் மரத்தின் அடியிலும் ஒரு சிவலிங்கம் இருக்கிறது.


பராய் மரத்தின் அடியில் சிவன் காட்சி தந்ததாக சொல்கிறார்கள். அம்பாள் பசும்பொன் மயிலம்மையும், நடராஜரும் தனிதனிச்சன்னதிகளில் தெற்கு பார்த்தபடி அருளுகின்றனர். வைகாசியில் பிரம்மோற்ஸவம் நடக்கும்போது தேரில் நடராஜர் மட்டும் எழுந்தருளி வீதியுலா வருகிறார். அவருடன் அம்பாள்கூட வருவதில்லை. இது வித்தியாசமானதாகும்.


ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி மாதம் முதல்நாள் இத்திருத்தலத்தில் காவிரியில் புனித ஸ்நானம் செய்வதை முதல் முழுக்கு எனப் பெரியோர் போற்றுவர். அன்றைய தினம் இறைவன் ரிஷப வாகனத்தில் அம்பிகையோடு எழுந்தருளி காவிரிக் கரையில் சுவாமி தீர்த்தம் கொடுத்தருளுவார். (ஐப்பசி கடைசி நாளன்று காவிரியில் மயிலாடுதுறை திருத்தலத்தில் ஸ்நானம் செய்வதைக் "கடை முழுக்கு" என்று போற்றுகின்றனர்). பராய்த்துறைக்கு வந்து தரிசித்தால் பாவங்கள் நீங்கப் பெறும் என்பது ஐதீகம்.


சிறப்புக்கள் 


திருமணத்திற்கு வரன் தேடுபவர்கள் சப்தகன்னிகளில் ஒருவளான வராகிக்கு அபிஷேகம் செய்து, தீபம் ஏற்ற வழிபடுகின்றனர்.


பராய்த்துறைநாதரை வணங்கிட தோல் நோய், புற்றுநோய் நீங்கும், பேச்சு வராத குழந்தைகளுக்கு பேச்சு வரும், அம்பாளை வேண்டிக்கொள்ள திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

போன்:  - 99408 43571


அமைவிடம் மாநிலம் :


தமிழ் நாடு

இத்தலம் திருச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலை வழியில் சுமார் 16 கி.மி. தொலைவில் உள்ளது. திருச்சியில் உள்ள சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் திருப்பராய்த்துறை செல்ல இருக்கின்றன.


பராய் மரக்காட்டில் இறைவன் எழுந்தருளியிருப்பதால் இத்தலம் 'பராய்த்துறை' எனப்படுகிறது.

இறைவன் பிட்சாடனராய்ச் சென்று தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அகற்றி அவர்கட்கு அருள்புரிந்தார்

முன்மண்டபத்தில் 12 ராசிகள் குறித்த கட்டம் மேல்,, விதானத்தில் இருக்கிறது. இதற்கு கீழே நின்றுகொண்டு சிவ லிங்கத்தையும், பிட்சாடனாரையும் ஒரே நேரத்தில் வழிபட்டால் ராசி மற்றும் கிரகதோஷங்கள் நீங்கும் என்கிறார்கள்.

திருமணத்திற்கு வரன் தேடுபவர்கள் சப்தகன்னிகளில் ஒருவளான வராகிக்கு அபிஷேகம் செய்து, தீபம் ஏற்ற வழிபடுகின்றனர்.

பராய்த்துறைக்கு வந்து தரிசித்தால் பாவங்கள் நீங்கப் பெறும் என்பது ஐதீகம்.


புற்று நோயை கட்டுப்படுத்தும் திருப்பாராய்த்துறை திருத்தலம்.


புற்று நோயின் தீவிரம் கட்டுக்குள் வருவதற்காக, இந்த ஆலயத்திற்கு நேரில் வந்து வழிபட்டுச் செல்பவர்களின் எண்ணிக்கை ஏராளம்.


திருச்சிராப்பள்ளி மாநகருக்கு வடமேற்கில் 15 கிலோமீட்டர் தூரத்தில் கரூர் குளித்தலை சாலையின் இடது ஓரத்திலேயே இருக்கிறது திருப்பாராய்த்துறை. முக்கொம்பு என்னும் சுற்றுலாப் பகுதியின் நுழைவு இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இந்தத் திருத்தலம்.


பராய் மரம் :


திருக்கோவிலின் வெளிச்சுற்று, உயர்ந்த மதிற் சுவர்களுக்கு இடையே இருக்கிறது. இருபுறமும் மலர்ச் செடிகளின் ஊடே நடுவில் கருங்கல் தள வரிசையில் நடந்து வந்தால், தென் மேற்கில் தனி சன்னிதியில் வீற்றிருக்கும் கன்னிமூலை கணபதியை தரிசிக்கலாம். வடமேற்கில் வள்ளி–தெய்வானை சமேத முருகப்பெருமான் தனிச்சன்னிதியில் கோவில் கொண்டுள்ளார்.


நடுவில் மிகப் பழங்காலத்து பராய் மரம், சுற்றிலும் கம்பி வேலி இடப்பட்டு காணப்படுகிறது. அடியில் சிவலிங்கம் வீற்றிருக்க சிறிது இலைகளுடன் உயர்ந்து நிற்கிறது பராய் மரம். இந்த மரத்தின் இலைகளும், பட்டையும், வேரும் முழுவதும் மருத்துவ குணமுடைய பராய்மரம் தான் தலவிருட்சமாக உள்ளது. மற்ற எந்த ஆலயத்திலும் இல்லாது இங்கே மட்டும் தான் இந்த மரம் இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு காலத்தில் இந்த இடம் பராய் மரங்கள் சூழ்ந்த காடாக இருந்திருக்கிறது. எனவே தான் ‘தாடுகாவனம்’ என்று வடமொழியில் அழைக்கிறார்கள். இறைவன் பராய்த்துறை நாதர் என்றும், தாருகாவன ஈசர் என்றும் மரத்தின் பெயரால் அழைக்கப்படுகிறார்.


பிரார்த்தனை :


கேன்சர் எனப்படும் புற்றுநோய் என்பது இன்றும் கடின நோயாகவே பார்க்கப்பட்டு வருகிறது. உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமான பெருக்கம் அடையும் தன்மை கொண்டது. இந்த நோய் உடலின் உள்ளுறுப்புகளிலும், வெளிப்புறத்திலும் தாக்கலாம். இடம், வளர்ச்சிக்குத் தகுந்தாற்போல, இந்த நோய்க்கு கதிரியக்கச் சிகிச்சை நவீன மருத்துவத்தில் அளிக்கப்பட்டு வருகிறது.


இருப்பினும் ‘இறைவன் சர்வ வல்லமை பெற்றவன்; நம்மைக் காப்பான்’ என்ற நம்பிக்கையில், அவனையும் துணைக்கு அழைத்துக்கொள்கிறோம். புற்று நோயின் தீவிரம் கட்டுக்குள் வருவதற்காக, இந்த ஆலயத்திற்கு நேரில் வந்து வழிபட்டுச் செல்பவர்களின் எண்ணிக்கை ஏராளம்.


கோவிலின் அக்னி மூலையில் உள்ள கிணற்றில் இருந்து நீர் இறைத்து, ஒற்றைப்படை வரிசையில் தல விருட்சத்துக்கு நீர் ஊற்றிவிட்டு அதனை பன்னிரண்டு முறை சுற்றி வரவேண்டும். பதினோரு முறை சிவ நாமம் சொல்லியும், பன்னிரண்டாவது சுற்றில் பிரார்த்தனையையும் சொல்லி இறைவனை வழிபட வேண்டும்.


மூலிகை மரக்காற்றே மனதுக்கும், உடலுக்கும் ஒரு புத்துணர்ச்சியைத் தரும். பிறகு பராய்த்துறைப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபடலாம். அல்லது அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். கோவிலில் அர்ச்சகர் கொடுக்கும் மூலிகை பிரசாதத்தைத் தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் அருந்திவிட்டு, சிவபெருமானின் அருள்பெற்ற விபூதியை உடலில் தரித்துக் கொள்வது நன்மை அளிக்கும்.


வாரம் தோறும் திங்கட்கிழமைகளிலோ அல்லது மாத சிவராத்திரி காலங்களிலோ, இத்தல இறைவனை தொடர்ந்து பிரார்த்தனை செய்து வந்தால், கை மேல் பலன் கிடைக்கும் என்கிறார்கள் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.


திருக்கோவில் அமைப்பு :


காவிரி தென்கரையோரம் 7 நிலை ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளது. நந்தியம்பெருமானை வழிபட்டு, அவரது அனுமதி பெற்று உள்ளே சென்றால், அங்கே மற்றொரு கோபுரம் ஐந்து நிலைகளுடன் நம்மை வரவேற்கிறது.


அதையும் கடந்து சென்றால், கலை அழகுமிக்க மண்டபங்களுக்கு அடுத்தபடியாக இறைவனின் கருவறை காணப்படுகிறது. கிழக்கு நோக்கிய வண்ணம் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார் திருப்பராய்த்துறை நாதர். மகா மண்டபத்தில் தெற்கு நோக்கி நடராஜர் சபை உள்ளது. அங்கிருந்து வெளியே வந்தால் அருகிலேயே தெற்கு நோக்கிய படி அன்னை ‘பசும்பொன் மயிலாம்பாள்’ என்ற திருநாமத்துடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.


இந்த மூர்த்தங்களை அடுத்தாற்போல, அழகிய கோலங்கொண்ட ஆறுமுகப்பெருமான் பன்னிரு கைகளுடன் ஆயுதங்களைத் தாங்கி, மயில் மீது அமர்ந்தபடி காட்சி தருகிறார். அவருக்கு இருபுறமும் வள்ளி– தெய்வானை வீற்றிருக்கிறார்கள். ஆறுமுகப்பெருமானின் முன்பாக திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் இருப்பது தனிச்சிறப்பாகும்.


தேவ கோஷ்டத்தில் தெற்கு நோக்கிய நிலையில் மேதா தட்சிணாமூர்த்தி, பின்புறம் லிங்கோத்பவருக்கு பதிலாக அர்த்தநாரீஸ்வரர் மற்றும் பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோரது திருவுருவங்கள் உள்ளன. ஈசானிய மூலையில் நவக்கிரகங்களுக்கான மேடை உள்ளது. இதில் சனீஸ்வரருக்கு மட்டும் காக்கை வாகனம் உள்ளது. அருகே மேற்கு நோக்கிய திசையில் கால பைரவர் காட்சி தருகிறார்.


சுவாமி அம்பாள் வீற்றிருக்கும் வெளி மண்டபத்தில் நுழைவு வாசலின் ஒரு தூணில், காலை முழுவதும் உயர்த்தி ஊர்த்துவத் தாண்டவமாடும் கோலத்தில் நடராஜர் வீற்றிருக்கிறார். அதற்கு எதிர் தூணில் அவருடன் போட்டி போட்டு நடனமாடும் கோலத்தில் காளியின் திருக்கோலம் அமைக்கப்பட்டிருப்பது அற்புதக் காட்சியாக உள்ளது.


‘அரக்கன் ஆற்றல் அழித்த அழகனைப்

பரக்கு நீர்ப்பொன்னி மன்னு பராய்த்துறை

இரக்கை மேவிய ஈசனை பேத்துமின்

பொருக்க நம்வினை போயறுங் காண்மீனே’ –என்ற அப்பர் 11 பதிகங்களை இந்தத் திருத்தலத்தில் பாடியுள்ளார். மேலும் திருஞான சம்பந்தர் 11 பதிகங்கள் பாடியிருக்கிறார். இது தவிர இத்தல இறைவனைப் பற்றி திருவாசகத்தில் மாணிக்கவாசகரும், பட்டினத்தாரும் பாடி சிறப்பித்துள்ளனர்.


முதல் முழுக்கு :


காவிரியின் தென்கரை சாலையை ஒட்டி இந்த ஆலயம் அமைந்திருப்பதால், காவிரி நதியே இந்த ஆலயத்தின் தல தீர்த்தமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் துலா மாதத்தின் (ஐப்பசி), முதல் நாள் அன்று இங்கு ‘முதல் முழுக்கு’ என்ற நீராடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பிறகுதான் மயிலாடுதுறை திருத்தலத்தில் ‘கடை முழுக்கு’ என்ற நீராடல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


முதல் முழுக்கு அன்று காவிரிக்கரையில் சுவாமியும், அம்பாளும் உற்சவர்களுக்கும் தீர்த்தவாரி நடைபெறும். பின்னர் அம்பாளும், இறைவனும் கோவிலுக்கு வருவார்கள். அப்போது அவர்களை வணங்கி வழிபட்டால், சகல தோஷங்களும், பாவங்களும் பறந்தோடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. புரட்டாசி மாதம் இந்த ஆலய இறைவனையும், இறைவியையும் அர்ச்சித்து வழிபடுவதும் தனிச் சிறப்பாக கூறப்படுகிறது.

   திருச்சிற்றம்பலம்.

Comments

Popular posts from this blog

Temple info -976 Sarva Siddhi Vinayakar Temple, Regal Palm Garden, Velachery, Chennai சர்வ சித்தி வினாயகர் கோயில், ரீகல் பால்ம் கார்டன், வேளச்சேரி, சென்னை

Temple info -2066 Sastha Preethi சாஸ்தா ப்ரீத்தி