Temple info -1362 Subramanyaswami Temple, Marungoor,Kanyakumari சுப்ரமணியஸ்வாமி கோயில், மருங்கூர், கன்னியாகுமாரி

 Temple info -1362

கோயில் தகவல் -1362



Subramanya Swamy Temple, Marungoor, Kanyakumari

Subramanya Swamy Temple is a Hindu Temple dedicated to Lord Murugan located at Marungoor Village in Kanyakumari District of Tamilnadu. Marungoor, also spelt Marungur, is located near Suchindrum in Kanyakumari District. In most of the Murugan temples, Lord Murugan can be seen on peacock but here Lord Murugan can be seen on a horse.


Legends


Sage Agastya installed Lord Murugan here:

It is believed that when Sage Agastya came down to Podhigai malai, he has installed this Murugan here.

Indra’s horse, Uchchaisiravas attained salvation here:

After Indran got cleansed from the curse of Sage Gowthama at Suchindrum temple, Indra’s horse, Uchchaisiravas also wanted salvation. It asked the same with Suchindrum Lord Shiva. He directed the horse of Indran to go to Marungoor and worship the Murugan there for salvation. It came along with Sunandhan and worshiped Murugan here and got salvation. Since the horse got salvation, this place is also called Vaaji Puram.

Thirumalai Amararpathy kaaththa Perumal Subramanya Swami:

Since Lord Murugan of this this place saved Indran from danger and hence he is called as Marungoor Thirumalai Amararpathy kaaththa Perumal Subramanya Swami.

Indra worshipped Lord Murugan here:

It is believed that after doing the Artha Jaama Pooja at Suchindrum temple, Indran comes to this place, takes bath in Amaravathy Kulam here and worships Aabhaththu Kaatha Devi and Murugan here. 


History


Idai-Aattru-Mangalam is the ancient name of this place, since this place had 2 rivers flowing around. Some of the Tamil Poets of the Sangam period – like Marungoor Kizhaar Kannannar, Marungoor Baahai Chaathan Bhoodhanaar, Marungoor Pattinaththu Sendhan Kumaranaar are from this place. In ancient times Marungoor village was a place for iron and steel industry. The soil was rich in iron and it was extracted and weapons were made. Steel was exported from this area. Over the centuries, the reserves were lost. (ref: Travancore State Manual – Vol – 2 – Page 635)

This was a war bastion with huge sheds for horses, armour houses, fort. The emergency armour room is now called as Aabhaththu kaaththa Veera Nangai Temple. This is the family deity of the local chieftains (small kingdoms). The Govt seal had a peacock and roaster as symbol and has “Thirukkai Vela Sengundham Thunai” as slogan. During Navarathri times, they had special functions here and celebrated Durgashtami in the Devi temple here and all weapons were kept in puja and was taken on parade on the 10th day, along with Palli Vettai ceremony.

The last king was Sahala kalai Marthanda Varma till AD 1504. He couldn’t rule further. He kept his swords and weapons at the feet of Devi here and even now the royal function has weapons placed in display. In 1570, the hands of the Murugan statue broke off. The king tried to change the stone idol. But the God came in his dream and asked him not to replace the statue. Instead he was asked to fit the Panchaloka (alloy of 5 metals) hands. The king did so. (Ref: Travancore State Manual – Vol 2, Pg 294-295). The same can be seen even now. 


The Temple


The Temple is situated atop a small hillock. This temple area is called as Kumarapuram Thoppur. Because of Kumaran's (Subramanya Swamy) name. Presiding Deity is called as Marungoor Thirumalai Amararpathy kaaththa Perumal Subramanya Swami. Presiding Deity graces the devotees with his consorts Valli and Devasena. The Thiruvasi, prabhai and the statue are all sculptured out of a single stone. This is the uniqueness of this idol.


In most of the Murugan temples, Lord Murugan can be seen on peacock but here Lord Murugan can be seen on a horse. Lord Murugan has been worshipped as Lord Siva, Brahmma and Vishnu during Kandha Shasti. Shrines for Kulasekara Vinayakar, Sangili Bhoothathan, Kasi and Viswanathar can be seen in this temple. There is a tunnel connecting the sanctum sanctorum of both the Suchindrum and Marungoor Temples, used during ancient times, during the times of war.


Festivals


Chithirai Thirukalyanam, Tirukarthikai, Kandha Shashti and Soora Samharam are the famous festivals at this temple.

Prayers

For little children, festival for giving first rice food after birth was conducted here. Six types of rices are cooked and offered to Lord Muruga specially during this festival.


Contact

Subramanya Swamy Temple,

Marungoor, Kanyakumari

Phone: +91 4652 241 421


Connectivity

The Temple is located at about 16 Kms from Boothapandi, 8 Kms from Thovalai, 12 Kms from Aralvaimozhi, 6 Kms from Suchindram, 14 Kms from Nagercoil, 10 Kms from Vadiveeswaram, 15 Kms from Kanyakumari and 100 Kms from Thiruvananthapuram. Marungoor can be reached from Kanyakumari, Nagercoil and Suchindram by Bus. Nearest Railway Stations are located at Kanyakumari, Nagercoil and Thovalai. Nearest Airport is located at Thiruvananthapuram.


Thanks to

Ilamurugan's blog



*கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாடு மருங்கூர் அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயம்.*


*மூலவர் : சுப்பிரமணியர்*


*தீர்த்தம் : முருக தீர்த்தம்*


*பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்*


*ஊர் : மருங்கூர்*


*மாவட்டம் : கன்னியாகுமரி*


*மாநிலம் : தமிழ்நாடு*


திருவிழா


கந்தசஷ்டி, பங்குனி உத்திரம், கார்த்திகை, சூரசம்ஹாரம்.


தல சிறப்பு


மூலஸ்தானத்தில் முருகன் அசுர மயில் மீது அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இவரது சிலை திருவாசி, மயிலுடன் ஒரே கல்லில் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பான அமைப்பு. முருகனுக்கு குதிரை வாகனம் உள்ள விசேஷத்தலம் இது.


திறக்கும் நேரம்


காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி


அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில்,மருங்கூர், நாகர்கோவில்கன்னியாகுமரி மாவட்டம்.


போன்


+91 4652- 241 421.


பொது தகவல்


பிரகாரத்தில் கன்னி விநாயகர், சண்முகர், குலசேகர விநாயகர், பீட வடிவில் காவல் தெய்வம் பூதத்தான் மற்றும் காசிலிங்கம் சன்னதிகள் உள்ளன.


பிரார்த்தனை


பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள முருகனை வழிபட்டுச் செல்கின்றனர்.


நேர்த்திக்கடன்


பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள முருகனுக்கு சிவப்பு வஸ்திரம் சார்த்தி, பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.


தலபெருமை


மும்மூர்த்தி அம்ச முருகன்


மூலஸ்தானத்தில் முருகன் அசுர மயில் மீது அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இவரது சிலை திருவாசி, மயிலுடன் ஒரே கல்லில் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பான அமைப்பு. உடன் வள்ளி, தெய்வானை இருக்கின்றனர்.


கந்தசஷ்டிக்கு மும்மூர்த்தி அலங்காரம்


ஐப்பசியில் சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் காலையில் முருகன் சிவப்பு வஸ்திரம் அணிந்து (சிவப்பு சாத்தி)நடராஜராகவும், மதியம் வெள்ளை (வெள்ளை சாத்தி) வஸ்திரத்துடன் பிரம்மாவாகவும், மாலையில் பச்சை (பச்சை சாத்தி) வஸ்திரம் அணிந்து விஷ்ணு சொரூபமாகவும் காட்சி தருவார்.


மக்களைக் காணும் மகேசன்


விமோசனம் கேட்டு தன்னை வழிபட்ட உச்சைசிரவஸுக்கு, சிவனே பாவ விமோசனம் கொடுத்தருளியிருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு செய்யாமல் முருகனை வழிபடும் படி அதை அனுப்பி வைத்தார். தன் அம்சமான முருகனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்பதற்காக சிவன் இவ்வாறு செய்ததாகச் சொல்வர். இதனால் இத்தல முருகனை சிவனாகக் கருதி சிவமுருகன் என்று அழைக்கிறார்கள். சிவனுக்குரிய ஆகமப்படியே பூஜைகளும் நடக்கிறது. கந்தசஷ்டி திருவிழா இங்குவிசேஷம். முருகனுக்கு குதிரை வாகனம் உள்ள விசேஷத்தலம் இது.


சோறூட்டும் வைபவம்


பிறந்த குழந்தைக்கு முதல் அன்னம் ஊட்டும் வைபவம் இக்கோயிலில் அதிகளவில் நடக்கிறது. இந்த சடங்கை நிகழ்த்த வரும் பக்தர்கள், சுப்பிரமணியருக்கு புளிசாதம், வெண்சாதம், சர்க்கரை பொங்கல், உப்பு, புளி, மிளகாய் சேர்ந்த துவையல் என அறுசுவை உணவைப் படைத்து, குழந்தைக்கு ஊட்டுகின்றனர். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு மருங்கில் (நெருங்கி) வந்து அருள்பவர் என்பதால், இவ்வூர் மருங்கூர் என பெயர் பெற்றது. இத்தலத்திற்கு வாசிபுரம் என்றும் பெயருண்டு. வாசி என்றால் குதிரை. பிரகாரத்தில் கன்னி விநாயகர், சண்முகர், குலசேகர விநாயகர், பீட வடிவில் காவல் தெய்வம் பூதத்தான் மற்றும் காசிலிங்கம் சன்னதிகள் உள்ளன. கோயில் எதிரில் முருக தீர்த்தம் உள்ளது. உற்சவர் சண்முகர், கந்தசஷ்டி விழாவின்போது மட்டுமே புறப்பாடாவார். மற்ற நாட்களில் இவரை சன்னதிக்குள் மட்டுமே தரிசிக்க முடியும்.


தல வரலாறு


அகலிகை மீது ஆசை கொண்ட இந்திரனின் உடல் முழுவதும் கண்ணாகும் படி அவளது கணவர் கவுதம முனிவர் சபித்து விட்டார். சாப விமோசனம் பெற இந்திரன் இங்கு வந்தான். இவ்வூர் அருகிலுள்ள சுசீந்திரத்தில் சிவன் காட்சி தந்து விமோசனம் கொடுத்தருளினார். இந்திரனைச் சுமந்ததால், தனக்கும் பாவம் ஒட்டிக்கொண்டதாகக் கருதிய அவனது வாகனமான உச்சைசிரவஸு என்னும் குதிரையும் சிவனிடம் விமோசனம் கேட்டது. சிவன் இத்தலத்தைச் சுட்டிக்காட்டி முருகனை வழிபட விமோசனம் கிடைக்குமென்றார். அதன்படி இங்கு வந்த உச்சைசிரவஸு, இங்கிருந்த குன்றின் மீது முருகனை வேண்டி தவமிருந்தது. முருகப்பெருமான் அதற்கு காட்சி தந்து விமோசனம் கொடுத்தருளினார். பிற்காலத்தில் இங்கு சுப்பிரமணியருக்கு கோயில் எழுப்பப்பட்டது. குதிரை வழிபட்ட தலம் என்பதால், இத்தல முருகன் விழாக்காலங்களில் மயிலுக்குப் பதிலாக குதிரையில் பவனிவருவார்.


சிறப்பம்சம்


அதிசயத்தின் அடிப்படையில்


மூலஸ்தானத்தில் முருகன் அசுர மயில் மீது அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இவரது சிலை திருவாசி, மயிலுடன் ஒரே கல்லில் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பான அமைப்பு. முருகனுக்கு குதிரை வாகனம் உள்ள விசேஷத்தலம் இது.


அமைவிடம்


நாகர்கோவில் வடசேரி பஸ் ஸ்டாண்டில் இருந்து 10 கி.மீ.. பஸ் உள்ளது.


அருகிலுள்ள ரயில் நிலையம்

நாகர்கோவில்


அருகிலுள்ள விமான நிலையம்

தூத்துக்குடி, திருவனந்தபுரம்


தங்கும் வசதி

நாகர்கோவில்

Comments

Popular posts from this blog

Temple info -976 Sarva Siddhi Vinayakar Temple, Regal Palm Garden, Velachery, Chennai சர்வ சித்தி வினாயகர் கோயில், ரீகல் பால்ம் கார்டன், வேளச்சேரி, சென்னை

Temple info -150 Thirupparaithurai Tharugavaneswarar temple திருப்பராய்துறை தாருகவனேஸ்வரர் கோயில். Padal Petra Sthalam No.120

Temple info -2066 Sastha Preethi சாஸ்தா ப்ரீத்தி